சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

காஷ்மீரில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலையடுத்து விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் பாதுகாப்புகடுமையாக்கப்பட்டுள்ளது.

மும்பை-டெல்லி இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டதாக புரளி பரவியதையடுத்து நேற்று இரவே பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டுவிட்டது. இந்தியாவில் விமானங்களைக் கடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக ராணுவ உளவுப் பிரிவுஏற்கனவே எச்சரித்துள்ளது.

தீவிரவாதிகளின் தொலைபேசி பேச்சுக்கள், ரகசிய வயர்லெஸ் பேச்சுக்களை இடைமறித்துக் கேட்ட ராணுவ தகவல் தொடர்புபிரிவினர் இந்தியாவில் விமானங்கள் கடத்துவது குறித்த தீவிரவாதிகளின் திட்டங்களை தெரிந்து கொண்டுள்ளனர்.

இதையடுத்துத் தான் மும்பை-டெல்லி விமானக் கடத்தல் புரளியை அரசே திட்டமிட்டு கிளப்பிவிட்டிருக்கலாம் எனவும்கருதப்படுகிறது. கடத்தல்களை சமாளிக்க இந்திய பாதுகாப்பு நடவடிக்கைகள் போதிய அளவு உள்ளனவா என்பைத்சோதனையிட உயர் மட்டத்தில் இப்படி ஒரு நாடகம் நடத்தத் திட்டமிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மத்திய அரசின் உத்தரவையடுத்து இந்தியா முழவதுமே விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் 3 அடுக்கு சோதனை அமல்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலைய நுழைவாயில், விமானநிலையத்திற்குள் ஒரு சோதனை மற்றும் விமானத்திற்கு ஏறும் முன் ஒரு சோதனை என பயணிகள் மூன்று கட்டமாகபரிசோதிக்கப்பட்ட பின்னரே உள்ளே அனுப்பப்படுகின்றனர்.

முறையான பயணச் சீட்டு இல்லாமல் வருவோர் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல,பார்வையாளர்களுக்கும் பலவித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

விமானங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் பகுதியிலும் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீஸார்விமானங்களைச் சுற்றிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ரன்வேயிலும் அடிக்கடி சோதனைகள் நடத்தப்படுகின்றன.

கல்கத்தா விமான நிலையத்தில் பயணிகள் தவிர வேறு அனைவரும் உள்ளே நுழையவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடும் பாதுகாப்பில் இருக்கும் மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற