உள்ளாட்சித் தேர்தல் - 7342 பேர் போட்டியின்றித் தேர்வு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் 7342 ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு தலா ஒருவர் மட்டுமே மனுத்தாக்கல்செய்துள்ளதால் அவர்கள் அனைவரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு பரிசீலனை புதன்கிழமை நடந்தது. அதன்பிறகு மா-நில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், மொத்த-முள்ள 1,31,560காலியிடங்களுக்கு 4,77,407 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இவற்றில் மொத்தம் 105 ஊரக உள்ளாட்சி காலியிடங்கள் மற்றும் 9 -நகர்ப்புறஉள்ளாட்சி காலியிடங்களுக்கு வேட்பாளர்கள் யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை.

இதுதவிர மொத்தம் 7342 பதவியிடங்களுக்கு தலா ஒருவர் மட்டுமே வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இவர்களில் யாரும் 5ம் தேதிக்குள் வாபஸ் பெறாவிட்டால் இவர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவர்என்றுகூறப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற