விடுதலைப்புலிகள் இயக்கத்தை தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

பின் லேடனின் தீவிரவாத இயக்கமான அல்-காய்தா இயக்கத்துடன் விடுதலைப்புலிகள் இயக்கத்தையும்வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.

இதனால் விடுதலைப் புலிகள் அமைப்பு சர்வதேச அளவில் தடை செய்யப்படும் என்று தெரிகிறது.

கடந்த செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் தீவிரவாதிகள் நடத்திய கோரத் தாக்குதலை அடுத்து, உலகம்முழுவதும் உள்ள 26 தீவிரவாத இயக்கங்களுக்கு அமெரிக்கா தடைவிதித்தது. மேலும் எந்த நாடும் இந்தத்தீவிரவாத இயக்கங்களை ஆதரிக்கக் கூடாது என்றும், அவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும்என்றும் அமெரிக்கா அறிவித்தது.

ஆனால், இதில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை அமெரிக்கா அப்போது சேர்க்கவில்லை.

அதே போல கடந்த 1999ம் ஆண்டிலேயே 26 அமைப்புகளை தீவிரவாத இயக்கங்களாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்தது. அப்போதும் புலிகள் இயக்கத்தை இதில் அமெரிக்கா சேர்க்கவில்லை.

ஆனால் இன்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்ட பட்டியலில் விடுதலைப்புலி இயக்கத்தையும், அப்பாவி மக்களைக்கொன்று குவித்து வரும் தீவிரவாத இயக்கங்களில் ஒன்றாக அமெரிக்கா சேர்த்துள்ளது. மேலும் பல பாலஸ்தீனஇஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அமெரிக்க வெறியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் போச்சர் கூறுகையில்,

வெளிநாடுகளில் இருந்துகொண்டு அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வரும் 26 தீவிரவாத இயக்கங்கள்1999ம் ஆண்டிலேயே தடைசெய்யப்பட்டன. இப்போது இதில் பின் லேடனின் அல்-காய்தா, பாலஸ்தீனத்தின்ஹமாஸ், பாலஸ்தீனிய இஸ்லாமிக் ஜிகாத், எகிப்தின் அல் ஜிகாத் மற்றும் காமா அல்-இஸ்லாமியா, இலங்கையின்தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம், கொலம்பியாவின் எப்.ஏ.ஆர்.சி, ஸ்பெயினின் பேஸ்க் ஈ.டி.ஏ. போன்றவைசேர்க்கப்பட்டுள்ளன.

இந்த இயக்கங்களுக்கு அமெரிக்க மக்கள் நிதியுதவியோ, பொருளுதவியோ அளிக்கக கூடாது. மேலும்வங்கிகளும், நிதிநிறுவனங்களும் இந்தத் தீவிரவாத இயக்கங்களின் கணக்குகளை முடக்கிவைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தடைசெய்யப்பட்ட இயக்கங்களில் பின் லேடன் தலைமையில் இயங்கி வரும் அல்-காய்தா இயக்கம்தான்அமெரிக்காவின் முக்கிய இலக்கு என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் கடந்த 1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை விடுதலைப்புலிகளின் தற்கொலைப்படைமனிதவெடிகுண்டு வைத்துக் கொன்றது. இதையடுத்த அந்த இயக்கம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகஇந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற