அதிமுக எம்.எல்.ஏ. அறையில் தொண்டரின் பிணம்
சென்னை:
சென்னையில் உள்ள எம்.எல்.ஏக்கள் விடுதியில் உள்ள ஒரு அதிமுக எம்.எல்.ஏவின் அறையில் சிவகாசியைச்சேர்ந்த அதிமுக தொண்டர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
சென்னை அண்ணா சாலையில் அரசினர் தோட்டம் உள்ளது. இங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏக்கள் விடுதிஉள்ளது. இங்குதான் எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ளனர்.
இங்கு தங்கியிருக்கும் எம்.எல்.ஏக்கள், தங்களைப் பார்க்க வரும் கட்சித் தொண்டர்கள், பிரமுகர்களை தங்களதுஅறைகளில் அனுமதியுடன் தங்க வைப்பது வழக்கம்.
இதேபோலவே, சிவகாசியைச் சேர்ந்த சீனிவாசன் என்ற அதிமுக தொண்டர், அதிமுக எம்.எல்.ஏ. ஒருவருடையபரிந்துரையின் பேரில் அனுமதி பெற்று அவரது அறையில் தங்கியிருந்தார்.
இந்நிலையில் சீனிவாசன் சனிக்கிழமை இரவு பிணமான நிலையில் அந்த அறையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
அறையில் சில குளிர்பான பாட்டில்களும், பிராந்தி பாட்டிலும் இருந்தன. இதனால் அவர் குடித்த பிராந்தியில் விஷம்கலந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
சீனிவாசனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதிமுக எம்.எல்.ஏ. அறையிலேயே அதிமுகதொண்டர் ஒருவர் பிணமானது குறித்து சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. யார் என்பதைத் தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.


