For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அணுகுண்டு ஏந்திச் செல்லும் புதிய அக்னி ஏவுகணை: இந்தியா சோதனை

By Staff
Google Oneindia Tamil News

பலசூர்:

Agni-1அணுகுண்டு ஏந்திச் செல்லும் திறன் கொண்ட புதிய அக்னி-1 ரக ஏவுகணை இன்று (வெள்ளிக்கிழமை)வெற்றிகரமாகப் பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.

ஒரிசா மாநிலம் அருகே உள்ள வீலர் தீவில் இருந்து இன்று காலை 8.50 மணிக்கு இந்த ஏவுகணை ஏவப்பட்டது.வங்களாக விரிகுடா கடலில் இது தனக்குத் தரப்பட்டிருந்த இலக்கை சரியாகச் சென்று தாக்கியது.

ஏவுகணையை இந்தியக் கடற்படைக் கப்பல்கள் தரையிலும், இந்திய செயற்கைக் கோள்கள் வானிலும் தொடர்ந்துகண்காணித்தன.

2,500 கி.மீ. தூரம் பறந்து சென்று தாக்கவல்லது இந்த அக்னி-1 ஏவுகணை. ஆனால், இதன் தூரத்தைக் குறைத்து700 கி.மீ. தூரம் சென்று தாக்கும் வகையில் ஏவுகணையில் மாற்றம் செய்யப்பட்டு இன்று ஏவப்பட்டது.

வழக்கத்தைவிட மிக அதிகமான எடையை இந்த ஏவுகணை எடுத்துச் சென்றது. இது அணு குண்டையும் ஏந்திச்செல்லும் திறன் கொண்டது.

இந்திய எல்லையில் இருந்து பாகிஸ்தானில் உள்ள பெரும்பாலான இலக்குகள் 700 கி.மீ. தூரத்துக்குள் தானஉள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், பாகிஸ்தானைத் தாக்கத் தேவையான வகையில் அக்னியின் தாக்குதல் தூரத்தைக் குறைத்து இன்றுசோதனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் முதல்முறையாக அக்னி ஏவுகணை இன்று திறந்த சரக்கு ரயில் பிளாட்பார்மில் வைத்து எடுத்து வரப்பட்டது.இதனால், இந்த ஏவுகணையை மிக எளிதாக எங்கும் கொண்டு செல்ல முடியும் என்பதை வெளியுலகுக்கு இந்தியாகாட்டியுள்ளது. மேலும் இதை எதிரியின் தாக்குதலில் இருந்து மறைப்பதும் எளிது.

இதற்கு முன் கடந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதியும் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. இதுவரை 6 முறைசோதிக்கப்பட்டுள்ள அக்னி, மூன்று முறை நீண்டதூரம் பறக்க வைத்தும், 3 முறை குறைந்த தூரம் பறக்க வைத்தும்சோதனை நடத்தப்பட்டுள்ளது.

எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென்று நடத்தப்பட்ட இந்த ஏவுகணைப் பரிசோதனை பலவிதமானகேள்விகளை எழுப்பியுள்ளது.

ஆனாலும் யாருக்கும் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தச் சோதனை நடத்தப்படவில்லை என்றும்இந்தியாவின் ஏவுகணை தயாரிப்புத் திட்டத்தி ஒரு பகுதியாகவே இந்தச் சோதனை நடத்தப்பட்டது என்றும்வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஒமர் அப்துல்லா கூறினார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், ராணுவ துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விஜய்ஓபராய், பாதுகாப்புத் துறை அமைச்சக அறிவியல் ஆலோசகர் டாக்டர் வி.கே. ஆத்ரே உள்பட முக்கிய அதிகாரிகள்இப்பரிசோதனையை நேரில் பார்வையிட்டனர்.

நாளை குடியரசு தின விழா கொண்டாடப்படவுள்ள நிலையிலும் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் தற்போதுபதற்றம் மிகுந்துள்ள சூழ்நிலையிலும் அக்னி ஏவுகணை பரிசோதனை நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஏவுகணை அணுகுண்டை ஏந்திச் செல்லும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் பாராட்டு:

இதற்கிடையே அக்னி ஏவுகணைச் சோதனையை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய விஞ்ஞானிகளுக்கு பிரதமர்அடல் பிஹாரி வாஜ்பாய் பாராட்டுக்களைத் தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்புக்காக இந்தச் சோதனைநடத்தப்பட்டுள்ளது என்றார்.

பாகிஸ்தான் எல்லையில் படைகள் குவித்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சோதனையை நடத்தியதன் மூலம்நாட்டின் பாதுகாப்புக்காக எதற்கும் தயாராக உள்ளோம் என்பதை இந்தியா தெள்ளத் தெளிவாகக் காட்டிவிட்டது.

முன்னதாக அக்னி சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதை டெலிபோன் மூலம் வாஜ்பாய்க்கு பெர்னாண்டஸ்தெரிவித்தார்.

இந்த ஏவுகணைச் சோதனை குறித்து அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளிடமும்பாகிஸ்தான் துணைத் தூதரகத்திடமும் முன்னதாக தெரிவிக்கப்பட்டுவிட்டதாக வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நிருபமா ராவ் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X