For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாஸா போட்டியில் வென்ற மாணவனுக்கு ஜெ. ரூ. 2.51 லட்சம் உதவி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அமெரிக்க விண்வெளி மையமான நாஸா உலக அளவில் நடத்திய போட்டியில் வென்ற தமிழக மாணவன்அவினாஷ் சந்திரசேகருக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ. 2.51 லட்சம் நிதி வழங்கினார். அந்த மாணவனின் உயர்கல்விக்காக இந்த நிதியை அவர் வழங்கினார்.

செவ்வாய் (Mars) கிரக ஆராய்ச்சி குறித்து சர்வதேச அளவில் பள்ளி மாணவர்களுக்கு நாஸா போட்டி நடத்தியது.இதில் 60 நாடுகளைச் சேர்ந்த 300 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் 8 பேர் ர்ேந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களில் ஒரு மாணவன்சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த அவினாஷ் சந்திரசேகர். எட்டாம் வகுப்பு படித்து வரும் இவன் விண்வெளிஆய்வில் மிகுந்த ஆர்வம் கொண்டவன்.

அமெரிக்காவில் நாஸாவில் சில வாரங்கள் தங்கியிருந்த இவன் செவ்வாய் கிரகம் குறித்து உரையாற்றினான். குரூப்டிஸ்கன்களிலும் பங்கேற்றான்.

இவனது உயர் கல்விக்கு தமிழக முதல்வர் உதவ வேண்டும் என்று கோரி ஒரு கடிதத்தை இவனது தாயார்எழுதியிருந்தார். இந்தக் கடிதத்தைக் கண்ட ஜெயலலிதா உடனடியாக இவனுக்கு உதவ அதிகாரிகளுக்குஉத்தரவிட்டார்.

இதையடுத்து முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 1 லட்சமும், எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து ரூ. 1.51லட்சமும் ஒதுக்கி இந்த மாணவனுக்கு வழங்க உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து அவினாஷ் தனது தந்தை, தாயார், தங்கையுடன் வந்து இன்று கோட்டையில் முதல்வரைச் சந்தித்தான்.அவனிடம் இந்த ரூ. 2.51 லட்சத்துக்கான காசோலையை ஜெயலலிதா வழங்கினார். நாஸாவில் தான் எடுத்தபயிற்சிகள், செவ்வாய் கிரகம் ஆகியவை குறித்து முதல்வருக்கும் அவன் விளக்கினான்.

அதை மிக ஆர்வமாகக் கேட்டுக் கொண்ட ஜெயலலிதா மிக நன்றாகப் படித்து சிறந்த விஞ்ஞானியாக உருவாகிசாதித்துக் காட்ட வேண்டும் என்று அறிவுறுத்தினார். அவனுக்கு சிறிய பரிசையும் வழங்கினார்.

ஒரு கடிதம் எழுதியவுடன் இவ்வளவு பெரிய நிதியை உதவியாக வழங்கியதற்காக ஜெயலலிதாவுக்கு அவனதுபெற்றோர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

தவறான சாதிச் சான்று: மாணவிக்கு உதவி:

அதே போல விருதுநகரைச் சேர்ந்த வனிதா என்ற பெண்ணுக்கு தவறான சாதிச் சான்றிதழ் வழங்கியதால் அரசின்உதவியை பெற முடியாமல் அவதிப்பட்டு வந்தார். உயர் கல்வியும் தடைபட்டது.

அது குறித்து ஜெயலலிதாவுக்கு அந்தப் பெண் புகார் கடிதம் எழுதியிருந்தார்.

அந்தப் பெண்ணையும் இன்று நேரில் அழைத்து சரியான சாதிச் சான்றிதழைக் கொடுத்த ஜெயலலிதா அரசுக்கல்லூரியில் பி.எஸ்சி. சீட்டையும் ஒதுக்கி தந்தார்.

காது கேளாத சகோதரர்கள்:

காது கேட்கும் கருவி வாங்க வசதியில்லாமல் தவித்து வந்து சகோதரர்களான சுதாகர் மற்றும் இளங்கோவனுக்குநிதியுதவியும் வழங்கினார் ஜெயலலிதா. இவர்கள் ஜெயலலிதாவுக்கு அனுப்பிய கருணை மனுவுக்கும் இன்று பதில்கிடைத்தது.

அவர்களை நேரில் அழைத்து காது கேட்கும் கருவிகளை முதல்வர் வழங்கினார். சைகையில் அவர்களுடன் பேசி,மருத்துவ உதவி வேண்டுமா என்று கேட்டார். ஆனால், இருவரும் இந்தக் கருவி போதும் என்று கூறிவிட்டனர்.

அதே போல ஐஸ்வர்யா என்ற ஒரு ஏழைச் சிறுமியின் மருத்துவ உதவிக்கு ரூ. 97,000மும் வழங்கினார்.

இன்று கோட்டையில் இந்த உதவிகளை ஜெயலலிதா வழங்கினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X