யாழ்பாணத்தில் அமெரிக்க அமைச்சர்: தமிழர்களுடன் பேச்சு

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

அமெரிக்க வெளியுறவுத்துறை இணையமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் இன்று யாழ்பாணம் சென்றார்.

1983ம் ஆண்டுக்குப் பின் அமெரிக்க மூத்த அமைச்சர் ஒருவர் சமீபகாலத்தில் இலங்கை வந்தது இதுவே முதல்முறையாகும். அதிலும் யாழ்பாணம் உள்ளிட்டதமிழர் பகுதிகளுக்கு அமெரிக்க அமைச்சர் வருவது இது தான் முதல் முறை.

இன்று காலை அமெரிக்காவில் இருந்து கொழும்பு பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையம் வந்திறங்கிய அவர் ஹெலிகாப்டர் மூலம் நேராகயாழ்பாணம் புறப்பட்டுச் சென்றார்.

புலிகளுடனான அமைதிப்பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஏற்கனவே வரவேற்புத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

யாழ்பாணத்தில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியின் எல்லை ஆரம்பிக்கும் இடம் வரை ஆர்மிடேஜ் சென்றார். இந்தப் பகுதியில் கண்ணி வெடிகளைஅகற்ற இலங்கை ராணுவத்துக்கு அமெரிக்கா ராணுவத்தினர் உதவி வருகின்றனர். இந்தப் பணியை ஆர்மிடேஜ் பார்வையிட்டார்.

யாழ்பாணம் பகுதியில் உள்ள பிஷப் மாளிகையில் பல்வேறு தமிழர் பிரதிநிதிகளுடன் ஆர்மிடேஜ் ஆலோசனை நடத்தினார். யாழ்பாண பிஷப்பையும், ராணுவஅதிகாரிகளையும் அவர் சநதித்தார். ஆனால், புலிகளின் பிரதிநிதிகளை அவர் சந்திக்கவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பை அமெரிக்கா தீவிரவாதஅமைப்பாக அறிவித்து தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழர் பகுதியில் பேட்டி:

இதன் பின்னர் நிருபர்களிம் பேசிய ஆர்மிடேஜ்,

இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா முழு அளவில் ஒத்துழைப்பு தரும். உதவியும் செய்யும். போதும் போதும் என்ற அளவுக்கு இங்கு போர்நடந்துவிட்டது. அழிவும் ஏற்பட்டுவிட்டது. இனி துப்பாக்கிச் சூடுகளுக்கும் மோதலுக்கும் எந்த அவசியமும் இல்லை. இனப் பிரச்சனைக்கு இருதரப்பினரும் அரசியல்ரீதியில் தீர்வு காண வேண்டும்.

இதன் பின்னர் கொழும்பு செல்லும் ஆர்மிடேஜ் இலங்கை ராணுவத்தினருக்கு அமெரிக்கா பயிற்சி அளிப்பது குறித்து அதிபர் சந்திரிகா மற்றும் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கேவுடன் இன்று இரவு விவாதிப்பார் என்று தெரிகிறது.

அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு அமெரிக்கா அளித்து வரும் ஆதரவின் ஒரு பகுதியாகவே ஆர்மிடேஜின் இந்தப் பயணம் அமைந்துள்ளதாகக்கருதப்படுகிறது. கடந்த மாதம் ரணில் விக்கிரமசிங்கே அமெரிக்கா சென்று அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவு கோரினார். இதன்தொடர்ச்சியாக ஆர்மிடேஜ் இலங்கை வந்துள்ளார்.

ஆர்மிடேஜின் இப் பயணம் புலிகள் மீதான அமெரிக்காவின் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரது வருகை மூலம் ஆயுதப்போராட்டத்தை கைவிடவும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் புலிகள் மீதான நிர்பந்தம் அதிகரிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இரவு ரணில் விக்கிரமசிங்கேயையும் ஆர்மிடேஜ் சந்தித்துப் பேசுகிறார்.

இந்தியா பயணம்:

இலங்கை பயணத்தை முடித்துக் கொண்டு ஆர்மிடேஜ் நாளை இந்தியா வருகிறார். இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழ்நிலை உருவானபோதுஆர்மிடேஜ் முயற்சியால் தான் அமைதி திரும்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

தீவிரவாதிகளை உடனே பாகிஸ்தான் தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும் என்று முஷாரபை நிர்பந்தித்து அவரிடம் இருந்து உறுதிமொழியையும் வாங்கினார்என்பது நினைவுகூறத்தக்கது.

இந்தியா தவிர பாகிஸ்தான் மற்றும் சீனா, ஜப்பானுக்கும் ஆர்மிடேஜ் செல்கிறார்.

தாய்லாந்து பேச்சுவார்த்தை எப்போது?:

தாய்லாந்தில் அடுத்த மாதம் தொடங்கவுள்ள புலிகள்- அரசு பேச்சுவார்த்தைக்கான தேதியையும் இடத்தையும் நார்வே நாடு 2 நாட்களில் அறிவிக்கும்என இலங்கை அரசியல் சட்ட விவகாரத்துறை அமைச்சர் பெரிஸ் கூறினார்.

செப்டம்பர் 12ம் தேதி முதல் 17ம் தேதி வரை இந்தப் பேச்சுவார்த்தைகள் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாய்லாந்தின் பாங்காக்,புக்கெட், சியாங் மாய் ஆகிய நகர்களில் ஏதாவது ஒன்றிலோ அல்லது கடற்படைத் தளத்திலோ இந்தப் பேச்சுக்கள் நடக்கலாம்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற