For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2000 ஆண்டு உயிர் வாழ முடியுமா? ரஜினிக்கு கருணாநிதி நோஸ்-கட்

Google Oneindia Tamil News

சென்னை:

ராமதாஸைத் தொடர்ந்து ரஜினிக்கு திமுக தலைவர் கருணாநிதியும் சூடு போட்டுள்ளார்.

பாபாஜி என்ற மகான் இமயமலையில் 2,000 ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாகவும் அவரை நான் சந்தித்தேன் என்றும் ரஜினிகூறியிருந்தார். இதை மிகக் கடுமையாக விமர்சித்தார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்.

இந் நிலையில் கருணாநிதியும் ரஜினியைக் கண்டித்துள்ளார். சென்னையில் திருமண நிகழ்ச்சியில் பேசிய அவர்,

ஆண்டவன் பெயரை வைத்தால் தான் பிள்ளைக்கு நல்லது, பெண்ணுக்கு நல்லது என்று கருதி அந்தப் பெயரை வைக்கிறார்கள். தயவு செய்துதமிழ் உணர்வை வளர்த்த தமிழ்ப் பெயரை வைத்துக் கொள்ளுங்கள்.

எனக்கு முன்னால் பேசிய ரகுமான்கான், இந்த மணமக்கள் புரோகிதர்கள் போல பல்லாண்டு.. பல்லாண்டு வாழ்க, பல்லாயிரம் ஆண்டுவாழ்க என்று சொன்னார். பல்லாயிரம் ஆண்டு என்றால் நூறாண்டு, நூற்றைம்பது ஆண்டுகள் வாழ்ந்தால் போதும்.

அதற்கு மேல் வாழ முடியாது. இப்போதெல்லாம் ஆயிரம் ஆண்டுகள், இரண்டாயிரம் ஆண்டுகள் வாழ்வதாக சொல்கிறார்கள். ஆன்மாதான் ஆயிரம் ஆண்டு, இரண்டாயிரம் ஆண்டு வாழ முடியுமே தவிர யாரும் அத்தனை ஆண்டுகள் வாழ முடியாது என காஞ்சிசங்கராச்சாரியரே மறுத்துள்ளார்.

யாரும் 2000 ஆண்டுகள் வாழ முடியும் என்றால் நமக்கு சந்தோஷம் தான். பெரிய ஞானி திருவள்ளுவர். அவரை விட பெரிய ஞானியாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவர் 2000 ஆண்டுகள் இருந்திருந்தால் நமக்கு எவ்வளவோ நல்லது நடந்திருக்கும்.

எனவே, ஆயிரம் ஆண்டுகள் வாழ்கிறார், இரண்டாயிரம் ஆண்டுகள் வாழ்கிறார் என்று அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று நம்பியாரும் அறிவை இழந்துவிட வேண்டாம். தடுமாற்றம் அடைந்திட வேண்டாம் என்றார் கருணாநிதி.

ராமதாஸ், ரஜினிக்கு இடையே நடந்து வரும் மோதலில் யாருக்கும் ஆதரவாக கருணாநிதி கருத்துத் தெரிவிக்கவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X