For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீரப்பனிடம் ஆதிவாசிகளை தூது அனுப்ப கர்நாடகம் புதிய திட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கர்நாடகத்தில் வசிக்கும் லட்சக்கணக்கான தமிழர்களின் நலன் கருதி நாகப்பாவை விட்டு விடுமாறு வீரப்பனுக்குகொளத்தூர் மணி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

வீரப்பனுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு கொளத்தூர் மணி கர்நாடகஅதிரடிப்படையால் கைது செய்யப்பட்டு பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நாகப்பாவை விட்டு விடுமாறு ஏற்கனவே ஒரு முறை சிறையில் இருந்தவாரே கேசட்டில் வீரப்பனுக்கு கோரிக்கைவிடுத்தார் மணி. அது வானொலி மூலம் ஒலிபரப்பப்பட்டது. இப்போது இரண்டாவது முறையாக வீரப்பனுக்குவேண்டுகோள் விடுத்துள்ளார் கொளத்தூர் மணி.

புதிய வேண்டுகோளில் அவர் கூறியிருப்பதாவது: வீரப்பன் அவர்களே, நானோ அல்லது பழ. நெடுமாறனோகாட்டுக்குள் தூதர்களாக வர முடியாது. என் மீது பல வழக்குகள் போடப்பட்டுள்ளன. அவற்றை நானே சந்தித்துக்கொள்கிறேன்.

நாங்கள் வருவோம் என்று நம்ப வேண்டாம். அதற்காக வருத்தப்படவும் வேண்டாம்.

நாகப்பாவின் உடல் நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டேன். அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டுஉடனடியாக விடுதலை செய்யவும். எனது கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.

காட்டில் அதிரடிப்படை இல்லை, வாபஸ் வாங்கி விட்டது. எனவே உங்களது உயிருக்கு எந்தவித ஆபத்தும்ஏற்படாது. கர்நாடகத்தில் வசிக்கும் லட்சக்கணக்கான தமிழர்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால்நாகப்பாவை உடனடியாக விடுவித்தேயாக வேண்டும் என்று கூறியுள்ளார் மணி.

கொளத்தூர் மணியின் இந்த கோரிக்கையை மைசூர் மற்றும் கோவை வானொலி நிலையங்கள் திரும்பத் திரும்பஒலிபரப்பி வருகின்றன.

தூதர் யார்?:

இதற்கிடையே வீரப்பனிடம் தூதராக யாரை அனுப்புவது என்பதில் பெரும் குழப்பத்தில் கர்நாடகம் உள்ளது.கொளத்தூர் மணியில் தம்பி பழனிச்சாமியை அனுப்புவதா, பாண்டிச்சேரியைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பைச்சேர்ந்த பேராசிரியர் கல்யாணி, சுகுமாறன் (இவர்கள் பழ.நெடுமாறனுடன் சேர்ந்து ராஜ்குமாரை மீட்கஉதவியவர்கள்) ஆகியோரை அனுப்புவதா என்பதில் குழப்பம் நிலவுகிறது.

ஆதிவாசிகளை அனுப்பத் திட்டம்:

இதற்கிடையே வீரப்பனுக்கு நெருக்கமான ஆதிவாசிகள் இருவரையே தூதுவராக அனுப்பவும் கர்நாடகம் யோசித்து வருவதாகக்கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆதிவாசிகளுடன் கர்நாடக அதிரடிப்படையினர் பேச்சு நடத்தி வருகின்றனர். தூதர் குறித்து இன்றுஇரவுக்குள் முடிவு செய்யப்படுவிடும் என்று தெரிகிறது.

தமிழக தேடுதல் வேட்டை:

கர்நாடக அதிரடிப்படை தனது தேடுதல் வேட்டையை நிறுத்திவிட்டபோதிலும் தமிழக அதிரடிப்படை தனது வேட்டையை நிறுத்தவில்லை.வீரப்பனைத் தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.

காட்டுக்குள் நாகப்பா குடும்பம்:

இந் நிலையில் வீரப்பனிடம் இருந்து நாகப்பாவை மீட்க நாங்களே அவருடன் பேச்சு நடத்தப் போகிறோம் என்று நாகப்பா குடும்பத்தினர்கூறியுள்ளனர். அவரது உறவினர்களும் ஆதரவாளர்களும் அவ்வப்போது காட்டுப் பகுதிக்குள் நுழைய ஆரம்பித்துள்ளனர். அவர்களைகர்நாடக அதிரடிப்படை தடுத்து திருப்பி அனுப்பி வருகிறது.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X