For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போராட்டங்களால் திணறும் தமிழகம்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை உள்பட தமிழகத்தில் இந்த வாரம் முழுவதும் தினசரி ஒரு பெரிய போராட்டம் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் தினசரி ஒரு அமைப்பு போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளது. பலவேறு கோரிக்கைகளுக்காகதினசரி ஒரு போராட்டம் என்ற நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக இன்று திமுக இளைஞர் அணி சார்பில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துமாவட்டங்களிலும் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டங்கள் நடைபெறுகின்றன. அரசின் செயல்பாடுகளைக்கண்டித்து இந்தப் போராட்டங்கள் நடக்கின்றன.

நாளை (22ம் தேதி) அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைக்கக் கூடாது என்று வலியுறுத்திபல்கலைக்கழக அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தொடர்ந்து வரும் 23ம் தேதி தமிழகம் முழுவதிலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது காலவரையற்றவேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்குகிறார்கள். போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக இந்தப்போராட்டம் நடைபெறுகிறது.

பின்னர் 24ம் தேதி கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்டத்தைக் கண்டித்து சிறுபான்மை மதத்தினர் சென்னையில்உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றன.

அன்று தமிழகத்தில் சிறுபான்மை அமைப்புகள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டும் என்றும்அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்று தான் தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் ஆரம்பமாகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து வரும் 25ம் தேதி பதவி நீக்கம் செய்யப்பட்ட 10,000 சாலைப் பணியாளர்கள், தங்களதுகுடும்பத்தினருடன் கோட்டை நோக்கி பேரணி செல்ல திட்டமிட்டுள்ளனர். போலீஸார் தடுத்தால் சிறை செல்லவும்தயார் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.

கடைசியாக வரும் 26ம் தேதி சென்னை மெரீனா கடற்கரைப்பகுதியில் உள்ள மீனவர் குடிசைகளை அகற்றுவதைக்கண்டித்து மிகப் பெரும் போராட்டத்தை நடத்த அகில இந்திய மீனவர் சங்கம் முடிவு செய்துள்ளது.

பாவம் தமிழகப் போலீசார்... தொடர் போராட்டங்களால் இவர்களுக்கு இந்த வாரம் முழுவதும் பெரும் தலைவலிதான்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X