For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லஞ்ச ஒழிப்பு போலீசார் வலையில் சிக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரையில் அரசு சுற்றுலா மாளிகையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையின் போது சமூக நலத்துறைகமிஷனர் சுப்பிரமணியம் கையும் களவுமாக மாட்டிக் கொண்டார். அவர் அறையில் இருந்த ரூ.1.15 லட்சம்பணத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

மாவட்ட வாரியாக ஏஜென்ட்டுகளை நியமித்துக் கொண்டு ஊட்டச் சத்து மையங்கள், உற்பத்தி நிலையங்கள்உள்ளிட்ட பல இடங்களில் சுப்பிரமணியம் தீபாவளி இனாம் வசூலித்து வந்ததாகப் புகார் வந்தது.

மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கும் இது போன்ற புகார்கள் வந்தன. தனி அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள்ஆகியோர் புகார்களைக் கொடுத்திருந்தனர்.

தன்னுடைய அட்டவணைப் படி தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய இடங்களில் தன்னுடைய"வசூலை" முடித்துக் கொண்டு மதுரை வந்தார் சுப்பிரமணியம்.

சுற்றுலா மாளிகையில் தனக்காக ஒதுக்கப்பட்ட அறையில் தங்கியிருந்த போது தான் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம்வசமாக மாட்டிக் கொண்டார்.

அதே சுற்றுலா மாளிகையில் மாறு வேடத்தில் வந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சுப்பிரமணியத்தின் அறைக்குவந்து செல்பவர்களை நோட்டம் விட்டனர். கிட்டத்தட்ட 40 பேர் வரை அவருடைய அறைக்கு வந்து சென்றவண்ணம் இருந்தனர்.

சமூக நலத்துறை அதிகாரிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதிகள், சத்துணவு வழங்கும்வியாபாரிகள் உள்ளிட்ட பலரும் வந்து தாங்கள் கொண்டு வந்திருந்த பணத்தை சுப்பிரமணியத்திடம் கொடுத்தனர்.

பணத்தைக் கொடுத்து விட்டு சுப்பிரமணியத்துடன் அவர்கள் பேசியதை லஞ்ச ஒழிப்பு போலீசார் வெகு ரகசியமாகடேப்பில் பதிவும் செய்துவிட்டனர்.

அவருடைய அறையை விட்டு வெளியே வந்த ஒவ்வொருவரையும் தனித் தனியாக அழைத்து லஞ்ச ஒழிப்புபோலீசார் விசாரித்தனர். அனைவரிடமிருந்தும் அவர் தீபாவளி இனாம் வசூல் செய்திருப்பது அப்போதுஉறுதியானது.

மாலை 5 மணியிலிருந்து இரவு 11.45 மணி வரை இந்த நாடகம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

நள்ளிரவுக்கு மேல் சுப்பிரமணியம் தங்கியிருந்த அறையின் கதவைப் போலீசார் தட்டினர். ஆனால் நீண்டநேரமாகியும் கதவு திறக்கப்படாததால், போலீசார் கதவை உடைத்துத் திறக்க முடிவு செய்தனர்.

அதற்குள் சுப்பிரமணியமே கதவைத் திறந்து வெளியே வந்துவிட்டார். அவர் வந்த வேகத்திலேயே போலீசார்அந்த அறைக்குள் அதிரடியாக நுழைந்தனர்.

பதறிப் போய் முகம் வெளிறிக் கிடந்த அவரிடம் விவரங்களைக் கூறிக் கொண்டே அந்த அறையை லஞ்ச ஒழிப்புபோலீசார் சல்லடையாகத் துளைத்துச் சோதனையிட்டனர்.

ஒரு சூட்கேசில் இருந்த மஞ்சள் பையில் ரூ.1,15,370 பணம் இருந்தது. "இது லஞ்சப் பணம் தானே?" என்றுஅதிகாரிகள் கேட்டபோது சுப்பிரமணியம் மவுனமாக இருந்தார்.

பின்னர் தொடர்ந்து காலை 8.30 மணி வரை போலீசார் அந்த அறையில் சோதனை நடத்தினர்.

இந்நிலையில் வழக்கம்போல அரசியல்வாதிகளுக்கு வரும் நெஞ்சு வலி அப்போது சுப்பிரமணியத்துக்கு வந்தது.உடனடியாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை டாக்டர் வரவழைக்கப்பட்டார்.

ரத்த அழுத்தம் மட்டும் கொஞ்சம் அதிகரித்துள்ளது. மற்றபடி ஒன்றும் இல்லை என்று டாக்டர் கூறினார்.

பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். யாராவது லஞ்சம் கொடுக்கும்போதும் பெறும் போதும் நேரடியாகப் பிடிபட்டால் தான் அவர்களைக் கைது செய்ய முடியும் என்பதால் தான்தற்போது சுப்பிரமணியத்தைப் போலீசார் விசாரணை நடத்திய கையோடு விட்டு விட்டனர்.

அதன் பிறகு சுப்பிரமணியம் சென்னைக்கு ஒரு காரில் புறப்பட்டுச் சென்றார். அவர் இருதய நோயாளி என்பதால்அவருடன் இரண்டு சமூக நலத்துறை அதிகாரிகளையும் போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதற்குள் இந்தச் சோதனை குறித்து அரசுக்கு போலீசார் தகவல் அனுப்பி விட்டனர். அவர் கைது செய்யப்படுவாரா,சஸ்பெண்ட் செய்யப்படுவாரா என்பதை அரசு தான் இனி முடிவெடுக்கும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X