இலங்கையிடமிருந்து மீனவர்களை மீட்க மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை
பாண்டிச்சேரி:
காரைக்கால் பகுதியிலிருந்து 8 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கடத்திச் சென்றுள்ள விவகாரத்தில் மத்தியவெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தலையிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கைவிடுத்துள்ளது.
நாகப்பட்டனம் மாவட்டம் அக்கரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 48 மீனவர்களை இலங்கைக் கடற்படை வீரர்கள்பிடித்துச் சென்றுள்ளனர். அவர்களை உடனடியாக மீட்கக் கோரி நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 18 மீனவகிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில் காரைக்கால் மீனவர்களும் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மீனவர்களை உடனடியாக மீட்கத் தேவையானநடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் சின்ஹாவுக்கு பேக்ஸ் செய்தி அனுப்பியுள்ளோம்.
காரைககாலில் கூட்டுச்சேரி என்ற இடத்திலிருந்து 2 படகுகளில் 8 மீனவர்கள் சென்றுள்ளனர். இந்தப் படகுகள் திசைமாறி இலங்கை கடல் எல்லைக்குள் புகுந்துள்ளன. கடல் அலை தாறுமாறாக இருந்ததால் இந்த வழிமாற்றம்நிகழ்ந்துள்ளது.
இதைத் தொடர்ந்து அவர்களை இலங்கைக் கடற்படை வீரர்கள் கைது செய்துள்ளனர்.
இவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை துணைக் கமிஷனருக்கும் கோரிக்கைஅனுப்பப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
குடும்பங்களுக்கு அரசு நிதியுதவி:
இந் நிலையில் காரைக்கால் பகுதியிலிருந்து இலங்கைக் கடற்படை வீரர்களால் பிடித்துச் செல்லப்பட்டுள்ளமீனவர்களின் குடும்பங்களுக்கு பாண்டிச்சேரி அரசு நிதியுதவி மற்றும் பொருள் உதவி அளிக்க உள்ளது.
8 மீனவர் குடும்பங்களுக்கும் தலா ரூ. 2,000 பணம், 10 கிலோ அரிசி, மற்றும் பிற சமையல் பொருட்களைவழங்குமாறு முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.


