For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயாவின் "நாவடக்கம்": கருணாநிதி பாராட்டு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கமுதல்வர் ஜெயலலிதாவின் "நாவடக்கம்" நிறைந்த பேச்சுக்களுக்கும் எழுத்துக்களுக்கும் உச்ச நீதிமன்றமே"சிறப்பான" சான்றிதழ் அளித்து விட்டதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்..

தான் நாவடக்கமின்றி பேசுவதாக ஜெயலலிதா கூறியதற்கு மறுப்பு தெரிவித்து கருணாநிதி வெளியிட்டுள்ளஅறிக்கையில்,

காஞ்சி பெரியவாள் என்று போற்றப்படும் பெரிய சங்கராச்சாரியார் எழுதிய "தெய்வத்தின் குரல்" என்றபுத்தகத்திலும், பிரபல காங்கிரஸ் தலைவர் கமலாபதி திரிபாதி அவர்களின் "இந்து விசுவகோஷ்" என்ற கலைக்களஞ்சியத்திலும் இந்து மதம் குறித்து கூறப்பட்டுள்ள கருத்துக்களைத் தான் நான் எடுத்துக் கூறியிருந்தேன்.

அவ்வாறு கூறியதற்கே என்னை நாவடக்கமில்லாதவன் என்றும், உளறுகிறேன் என்றும் பகுத்தறிவின் பரிணாமவளர்ச்சிக்கு உதாரணமாகத் தன்னையே காட்டிக் கொள்ளும் ஜெயலலிதா பேசியுள்ளார்.

தான் பேசியதோடு நில்லாமல் தன்னுடைய ஏவலர்களையும் ஏவிவிட்டு ஏசல் அறிக்கைகளை விடச் சொல்லிஅகமகிழ்ந்து கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.

ஆனால் "நாவடக்கத்துடன்" அவர் பேசிய பேச்சுக்களுக்கும், விடுத்த "நாகரிக" அறிக்கைகளுக்கும் எத்தனையோஆதாரங்கள் உள்ளன.

அவற்றை மறுக்கும் வாய்மையோ, அரசியல் பண்பாட்டுத் தூய்மையோ அவரிடமோ, அவருடையஏவலர்களிடமோ இருந்தால் அவற்றை ஏற்றுக் கொள்ள நான் தயாராக உள்ளேன்.

இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பதை மறந்து விட்டோ, அல்லது மறைத்து விடலாம் என்றநம்பிக்கையுடனோ "அம்மையார்" அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய "நாகரிக" வாசகங்களின் பட்டியல் இதோ:

  • என்னுடைய புகழையும், செல்வாக்கையும் கண்டு எம்.ஜி.ஆர். பொறாமைப்படுகிறார் (அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்திக்கு ஜெயலலிதா ஆங்கிலத்தில் எழுதிய கடிதம்).
  • மோரில் விஷம் கலந்து எம்.ஜி.ஆர். உயிரை ஜானகி அம்மையார் முடித்து விட்டார்.
  • தமிழக ஆளுநர் சென்னா ரெட்டி என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார்.
  • எனக்கும் பிரதமர் நரசிம்ம ராவுக்கும் தலைமுறை இடைவெளி உள்ளது.
  • காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒரு வெளிநாட்டுப் பெண். அவரை இந்நாட்டில் நுழைய விட மாட்டோம்.
  • டெல்லியின் தூண்டுதல் காரணமாகத் தான் தமிழகத்தில் வழிப்பறிக் கொள்ளைகள் நடக்கின்றன. ஆந்திர முதல்வர் ஒரு மோசடிப் பேர்வழி (கிருஷ்ணா நதி நீர் விவகாரத்தில்).
  • ராஜிவ் படுகொலைக்கு மூப்பனாரும் உடந்தை.
  • துணைப் பிரதமர் அத்வானிக்கு அம்னீஷியா நோய் உள்ளது.
  • காவிரி பிரச்சனையில் மதிமுகவின் மத்திய அமைச்சரான கண்ணப்பன், மணி சங்கர் ஐயர் மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் போன்றவர்களின் குறுகிய மனப்பான்மை மற்றும் கீழ்த்தரமான நடவடிக்கைகளுக்கு மாறாக நான் எடுத்துள்ள முயற்சிகள் தான் தற்போது பயனளிக்கத் தொடங்கியுள்ளன (14.9.2002).
  • டெல்டா மாவட்டமான திருவாரூரில் பிறந்த கருணாநிதியும் மத்திய அமைச்சர் முரசொலி மாறனும் காவிரி விவசாயிகளுடன் தங்களை ஒன்றாக நினைக்கவில்லை. ஒருவேளை தாங்கள் அப்பகுதியில் வேளாண்மை புரியும் இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று அவர்கள் நினைத்திருக்கலாம். அல்லது அவர்களுடைய பரம்பரைத் தொழில் விவசாயம் அல்ல என்பதாலும் கூட இருக்கலாம் (14.9.2002).
  • ஏதேதோ பிரச்சனைகளுக்காக தினமும் டி.வி. கேமராக்கள் முன் ஆபாசமாகப் பேட்டி கொடுத்து வரும் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், அவருடைய தலைவி சோனியா காந்தி மூலமே கர்நாடக முதல்வரை அணுகி தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்துவிடச் சொல்ல வேண்டியது தானே? (14.9.2002).
  • குஜராத் பிரச்சனையில் தேர்தல் கமிஷன் தன் அதிகார வரம்பை மீறி நடந்து கொண்டுள்ளது (29.8.2002).
  • மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஒரு பொய்யர் (14.8.2002).
  • மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கத் தயாராக உள்ளதாக சோனியா கூறியிருப்பது, எப்படியாவது ஒன்றை அடைய வேண்டும் என்ற ஆதங்கத்தை, வெறியை, இயலாமையையே காட்டுகிறது (15.11.2002).
இவ்வாறு அம்மையாரின் "நாவடக்கம்" மிகுந்த சொற்களுக்கான எடுத்துக்காட்டுக்களை எழுதிக் கொண்டேசெல்லலாம். இது போன்ற பேச்சுக்கள் தான் "நாவடக்கம்" மிக்கவை என்றால் அப்படிப் பேச எனக்குத் தெரியாதுதான்.

ஜெயலலிதாவின் "அவையடக்கம்" நிறைந்த பேச்சுக்களுக்கும், எழுத்துக்களுக்கும் உச்ச நீதிமன்றமே "சிறப்பான"சான்றிதழ் அளித்து விட்டதே, பிறகு நாம் ஏன் தனியாக ஒரு "சான்றிதழ்" வழங்கும் வேலையில் இறங்க வேண்டும்?

மக்கள் எதையும் மறந்துவிடக் கூடிய சுபாவம் படைத்தவர்கள் என்ற ஒரே நம்பிக்கையுடன் அம்மையார்அவர்களும், அவருடைய அமைச்சர்களும் வாய் நீளம் காட்டுவது வரலாற்று ஏடுகளில் அழுத்தமாகப் பதிந்தேஇருக்கிறது.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X