For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பஸ்கள் தனியார்மயம்: 38,000 பேர் வேலை இழப்பர்- கருணாநிதி எச்சரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அரசு போக்குவரத்துக் கழகத்தை தமிழக அரசு தனியார்மயமாக்குவதைக் கடுமையாகக் கண்டித்த திமுக தலைவர்கருணாநிதி, இதனால் 38,000 பஸ் ஊழியர்கள் வேலை இழக்க நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் போக்குவரத்துத் துறையில் 50 சதவீதத்தை தனியாரிடம் ஒப்படைக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆட்சேபனைகள் இருந்தால் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்றும் அரசு அறிவிப்பில்கூறப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

அரசு போக்குவரத்துக் கழகம் தனியார்மயமாக்கப்படாது என்று சட்டசபைக் கூட்டத்தில் உறுதியாகக் கூறியமுதல்வர் ஜெயலலிதா தற்போது வழக்கம் போல அதற்கு எதிரான நவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துக் கழகத்தை அரசுடைமை ஆக்கிய போது, அதை உச்சநீதிமன்றமே வெகுவாகப் பாராட்டியது.

தமிழகத்தில் இரண்டு லட்சம் மாணவர்கள் பஸ்களில் இலவசமாகப் பயணம் செய்கிறார்கள். அவைதனியார்மயமாகிவிட்டால் இந்தத் திட்டம் தொடருமா என்பது குறித்துத் தெரியவில்லை.

மேலும் அரசின் இவ்வுத்தரவால் 38,000 பஸ் ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

எனவே அரசு போக்குவரத்துக் கழகம் தனியார்மயமாக்கப்படுவதைக் கண்டித்து அனைத்துத் தரப்பினரும் போராடவேண்டிய தருணம் இது என்றார் கருணாநிதி.

இ. கம்யூ. எதிர்ப்பு:

அரசு போக்குவரத்துக் கழகம் தனியார்மயமாக்கப்படுவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் நல்லக்கண்ணு வெளியிட்டுள்ளஅறிக்கையில்,

அரசின் இந்த முடிவால் பல லட்சக்கணக்கான கிராமப்புற மாணவர்கள் இலவச பஸ் பாஸ் திட்டத்தை உபயோகிக்கமுடியாமல் போக நேரிடும்.

பொது மக்களுக்கும் போக்குவரத்தில் பல இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான பஸ்ஊழியர்களும் பாதிக்கப்படுவார்கள்.

இதைக் கடுமையாகக் கண்டிப்பதோடு, அரசு பஸ்களைத் தனியார்மயமாகக்கும் தன்னுடைய முடிவை தமிழக அரசுமாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம் என்று கூறியுள்ளார்.

வழக்கு தொடர சி.ஐ.டி.யூ. முடிவு:

இதற்கிடையே போக்குவரத்துத் துறையில் 50 சதவீதத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் தமிழக அரசின் முடிவைஎதிர்த்து கோர்ட்டில் வழக்குத் தொடர சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் முடிவு செய்துள்ளது.

அரசின் முடிவை எதிர்த்து கடுமையாக போராட இருப்பதாக சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக வரும் 26ம் தேதி அனைத்து போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகங்கள் முன்பும் தர்ணாநடத்தப்படவுள்ளது.

நவம்பர் 28ம் தேதி முதல் டிசம்பர் 8ம் தேதி வரை தொழிலாளர்களும், சங்க நிர்வாகிகளும் சேர்ந்து, எம்.பிக்கள்,எம்.எல்.ஏக்கள், மேயர்கள் மற்றும் பஞ்சாயத்து யூனியன் தலைவர்களைச் சந்தித்து தனியார்மயமாக்கலுக்குஎதிராகக் குரல் கொடுக்குமாறு கேட்டுக் கொள்வார்கள்.

டிசம்பர் 9ம் தேதி போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மனிதச் சங்கிலிப்போராட்டம் நடத்துவார்கள்.

இதுதவிர அரசின் முடிவை எதிர்த்து கோர்ட்டில் வழக்குத் தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக சி.ஐ.டி.யூ.பொதுச் செயலாளர் செளந்தரராஜன் கூறினார்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X