21ம் தேதி முதல் சென்னை தொலைபேசிகளுக்கு 8 எண்கள்
சென்னை:
வரும் 21ம் தேதி முதல் சென்னையில் உள்ள 10 லட்சம் தொலைபேசிகளுக்கும் 8 இலக்க எண்கள்அளிக்கப்படுகின்றன.
தனியார் தொலைபேசி நிறுவனங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக பி.எஸ்.என்.எல். நிறுவனம்தன்னுடைய எண்களை மாற்ற முடிவு செய்தது.
தமிழகம் முழுவதும் எண்களை மாற்றும் பணி வெகு வேகமாக நடந்து வருகிறது. ஏற்கனவே மதுரை, திருச்சிஉள்ளிட்ட நகரங்களில் எண்கள் மாறிவிட்டன.
ஏற்கனவே உள்ள தொலைபேசி எண்களுக்கு முன்பாக "2" என்ற ஒரு எண்ணைச் சேர்த்தாலே போதுமானது.
அந்த வகையில் சென்னையில் உள்ள 10 லட்சம் தொலைபேசி எண்களும் வரும் 21ம் தேதி நள்ளிரவு முதல் 8இலக்கம் கொண்ட எண்களாக மாற்றப்படுகின்றன.
உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து சென்னைக்குத் தொலைபேசி செய்பவர்கள் ஏற்கனவே உள்ளஎண்ணுக்கு முன்பாக "2" என்ற எண்ணை மட்டும் சேர்த்து "டயல்" செய்ய வேண்டும்.
மொபைல் எண்களும்...
இந்நிலையில் பி.எஸ்.என்.எல். மொபைல் எண்களும் வரும் 21ம் தேதி நள்ளிரவு முதல் மாறுகின்றன.
அதன்படி தற்போது 501 என்று தொடங்கும் மொபைல் தொலைபேசி எண்கள் 2001 என மாற்றம்செய்யப்பட்டுள்ளது.
வரும் 21ம் தேதி (சனிக்கிழமை) நள்ளிரவு முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கு வரும் என்று சென்னைத்தொலைபேசி தலைமைப் பொது மேலாளர் எஸ்.எஸ். ஐயர் கூறினார்.
-->


