For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பா.ஜ.க- திமுக கூட்டணி: வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுகிறது மார்க். கம்யூ.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இந்துத்துவா கொள்கையில் தீவிரமாக இருப்போம், குஜராத்தைப் போல நாடு முழுவதும் இந்துத்துவாவை முன் வைததுபிரச்சாரத்தில் ஈடுபடுவோம் என பா.ஜ.க. திட்டவட்டமாக அறிவித்துவிட்ட பின்னரும் அந்தக் கட்சியுடன் திமுக கூட்டணிவைத்திருப்பது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக திமுகவை மிக வன்மையாக அதே நேரத்தில் மிக மென்மையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையின் விவரம்:

திமுக ஒரு மதசார்பற்ற கட்சி என்பதில் எங்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. மேலும் திமுக ஒரு வலுவான ஜனநாயக இயக்கம்.திமுக மீது எங்களுக்கு எந்தவிதமான கோபமோ அல்லது அலர்ஜியோ இல்லை.

அதே நேரத்தில் மத வெறியைப் பரப்பும் பா.ஜ.கவையும் அதன் பரிவாரங்களை வேறடி மண்ணோடு ஒழித்துக் கட்டுவது தான்தேச பக்தியுள்ள ஒவ்வொரு கட்சியின் கடமை என்று நினைக்கிறோம்.

மதவெறி கொண்ட பா.ஜ.கவுடன் சந்தர்ப்பவாதக் கூட்டணி வைத்துள்ள கட்சிகளை எங்களால் விமர்சிக்காமல் இருக்கமுடியவில்லை. இதில் எங்களுக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை.

தமிழகத்தில் தனியார்மயமாக்கல் என்ற அதிமுக அரசின் கொள்கையை எதிர்க்கிறோம். அதே போல திமுக அங்கம் வகிக்கும்மத்திய பா.ஜ.க. அரசின் தனியார்மயமாக்கல் கொள்கையையும் எதிர்க்கிறோம். இதை திமுகவுக்கு வசதியாக எங்களால்மறந்துவிட இயலவில்லை.

மக்களின் சொத்தான பல எண்ணெய் நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் பா.ஜ.க. அரசின் செயலை தேசிய ஜனநாயகக்கூட்டணியில் உள்ள சில கட்சிகள் எதிர்த்தன. ஆனால், திமுக வாயே திறக்கவில்லை. அதே போல சேலம் உருக்காலையைதனியாருக்கு விற்கும் முயற்சியையும் திமுக எதிர்க்கவில்லை.

இதையெல்லாம் சுட்டிக் காட்டுவதால் திமுகவை வசை பாடுவதாக நினைக்கக் கூடாது.

முஸ்லீம்கள் அனைவருக்கும் மரண தண்டனை தருவோம் என்று பேசுகிறார் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா.தொகாடியாவின் கருத்து பா.ஜ.கவின் கருத்து அல்ல என்று கருணாநிதி கூறக் கூடும். ஆனால், கருணாநிதியே தான் முன்புஆர்.எஸ்.எஸ். என்ற ஆக்டோபசின் கைகள் தான் வி.எச்.பி., பா.ஜ.க, பஜ்ரங் தள் போன்றவை என்று மிகச் சரியாக சுட்டிக்காட்டினார்.

இப்போது இந்துத்துவாக் கொள்கையை நாடு முழுவதும் அமலாக்கப் போவதாக அக் கட்சியின் தலைவர் வெங்கைய்யா நாயுடுதெளிவாகக் கூறிவிட்டார்.

இனியும் இந்தக் கூட்டணியில் இருக்கத் தான் வேண்டுமா என்பதை கலைஞர் தான் முடிவு செய்ய வேண்டும். பா.ஜ.க.கூட்டணியில் இருக்கும் வரை மதசார்பின்மை, ஜனநாயகம், பகுத்தறிவு ஆகியவை குறித்து திமுக பேசுவதெல்லாம்அர்த்தமற்றதாகவே இருக்கும்.

அந்தக் கூட்டணியில் இருந்து வெளியே வந்து மதசார்பின்மை குறித்து கலைஞர் கவலைப்படுவது தான் பொருத்தமானதாகஇருக்கும்.

இவ்வாறு மார்க்சிஸ்ட் கட்சியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X