For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமைதி கண்காணிப்பு குழுவுக்கு புலிகள் கோபக் கடிதம்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

யாழ்பாணத்தில் ராணுவத்தினரின் ஆக்கிரமிப்பு இருப்பதை ஆதரித்துப் பேசியுள்ள அமைதிக் கண்காணிப்புக் குழுவினருக்குகடும் கண்டனம் தெரிவித்துள்ளது விடுதலைப் புலிகள் இயக்கம்.

இது தொடர்பாக அமைதிக் கண்காணிப்புக் குழுவின் (Sri Lanka Monitoring Mission)தலைவருக்கு கோபக் கனல் தெறிக்கும்கடிதத்தை எழுதியுள்ளார் புலிகளின் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம்.

அமைதிக் குழுவின் தலைவரும் முன்னாள் நார்வே ராணுவத் தளபதியுமான டுரோன்ட் புருஹோவ்டாவுக்கு பாலசிங்கம்எழுதியுள்ள கடித விவரம்:

யாழ்பாணத்தில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளவை தீவிர பாதுகாப்புப் பகுதிகள் என்றும் அங்கிருந்து ராணுவத்தினரைவெளியேற்றினால் அது பிரச்சனையை உருவாக்கும் என்றும் நீங்கள் கருத்துத் தெரிவித்துள்ளீர்கள். மேலும் அந்தப் பகுதிகளில்ராணுவத்தின் தாக்குதல் திறனை பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் எடுப்பது தவறு என்று பேசியுள்ளீர்கள்.

இதன்மூலம் தமிழர்களின் சொத்துக்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள ராணுவத்திற்கு நீங்கள் முழு ஆதரவாகப் பேசுவதுதெரிகிறது.

ராணுவத்தினரை யாழ்பாணத்தில் இருந்து திரும்பப் பெற்றால் புலிகள், ராணுவ படைகளின் சம நிலை குலையும் என்று கூறியுள்ளநீங்கள், இந்த ஆக்கிரமிப்பால் யாழ்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட லட்சக்கணக்கான தமிழ் குடும்பங்கள் குறித்துகவலைப்படாதது ஏன்?

அமைதிப் பேச்சுவார்த்தையை விரைவுபடுத்தும் வகையில் இந்த ஆக்கிரமிப்புகளை ராணுவம் கைவிட வேண்டும் என்றகோரிக்கையை வைத்தோம். ஆனால், அதை ராணுவம் நிராகரித்தது. ஆனால், இந்த ஆக்கிரமிப்புகளை ஆதரித்து நீங்களும்ராணுவத்தின் தொனியில் பேசியிருக்கிறீர்கள்.

இது ஏற்கத்தக்கதல்ல. ராணுவத்தின் குரலில் பேசும் இந்தக் கண்காணிப்புக் குழுவே தேவை தானா என்று கூட எங்களுக்குச்சந்தேகம் வருகிறது.

நாங்கள் ராணுவத்தை முழுவதுமாக உடனே வெளியேறச் சொல்லவில்லை. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர்களின் வீடுகளைவிட்டுத் தான் வெளியேறச் சொல்கிறோம்.

இவ்வாறு தனது கடிதத்தில் ஆண்டன் பாலசிங்கம் கூறியுள்ளார்.

பின்னணியில் சந்திரிகா:

யாழ்பாணத்தில் தமிழர்களின் வீடுகளை ஆக்கிரமித்து பாதுகாப்பு அரண்களை அமைத்துள்ள ராணுவத்தை எக் காரணம்கொண்டும் வெளியேற வேண்டாம் என்று அதிபர் சந்திரிகா உத்தரவிட்டுள்ளார்.

எக் காரணம் கொண்டு ஆக்கிரமித்த வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என ராணுவத்தினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாகஅவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் வரும் ஜனவரி 6ம் தேதி தாய்லாந்தில் நடக்கவுள்ள அடுத்த சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகளில் புலிகள் இந்தப்பிரச்சனையைக் கிளப்புவர் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X