குழந்தைகளுக்கு கதை எழுத ஜெனரல் பத்மனாபன் முடிவு
சென்னை:
இந்திய ராணுவத் தளபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற ஜெனரல் செளந்தரராஜன் பத்மனாபன் இனி தன்னுடையவாழ்நாளை சென்னையிலேயே கழிக்கப் போவதாகக் கூறினார். மேலும் குழந்தைகளுக்காக நிறைய கதைகள்எழுதப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் 20வது ராணுவ தளபதியான தமிழகத்தைச் சேர்ந்த பத்மனாபன், கடந்த 47 ஆண்டுகளாக இந்தியராணுவத்தில் பணியாற்றி விட்டு இன்று ஓய்வு பெற்றார். அவரிடமிருந்து ஜெனரல் நிர்மல் சந்தர் விஜ்பொறுப்புக்களைப் பெற்றுக் கொண்டார்.
பொறுப்புக்களை ஒப்படைத்த பின்னர் நிருபர்களிடம் பேசிய பத்மனாபன், கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதிநாடாளுமன்றம் தாக்கப்பட்ட பின்னர் பாகிஸ்தான் எல்லை நெடுகிலும் இந்தியப் படைகளைக் குவித்ததைத்தான்என்னுடைய சர்வீஸின் முக்கியப் பணியாகக் கருதுகிறேன் என்றார்.
பின்னர் தனி விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார் பத்மனாபன். அவருக்கு மீனம்பாக்கம் விமானநிலையத்தில் சிறப்பான ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.
தன்னுடைய எஞ்சிய வாழ்நாள் முழுவதையும் சென்னையிலேயே கழிக்கப் போவதாக அப்போது நிருபர்களிடம்தெரிவித்தார் பத்மனாபன். அவர் மேலும் கூறுகையில்,
கடவுள் அருளால் எனக்கு 100 சதவீத திருப்தி எனக்குக் கிடைத்துள்ளது. நான் எதிர்பார்த்த அளவுக்கு ராணுவத்தில்பணியாற்றியுள்ளேன்.
ராணுவத்தை விட்டும் அதிலுள்ள நண்பர்களை விட்டும் வெளியேறி வருகிறோமே என்ற கவலை சிறிதளவுஏற்பட்டுள்ளது.
ஆனாலும் சொந்த ஊருக்கு, வீட்டுக்கு வருவதை மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன். ஓய்வுக் காலத்தில்குழந்தைகளுக்காக நிறையக் கதைகள் எழுதப் போகிறேன் என்று மகிழ்ச்சியுடன் கூறினார் பத்மனாபன்.
கடந்த ஆண்டு போர் அபாயம் ஏற்பட்ட சூழ்நிலையில் இந்தியா தாக்கியிருந்தால் தாங்கள் அணுகுண்டால்தாக்கியிருப்போம் என்று பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் நேற்று பேசியது குறித்துபத்மனாபனிடம் நிருபர்கள் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த அவர், "மண்ணால் செய்த சிறு பானையைக் கொண்டு கிணற்றில் தண்ணீர் எடுக்க பாகிஸ்தான்நினைக்கிறது. அது நிச்சயம் எப்போதாவது உடைந்து போகும். ஆனாலும் நாங்கள் எதற்கும் தயாராகத்தான்இருந்தோம்" என்றார் பத்மனாபன்.
பின்னர் பெசன்ட் நகரில் உள்ள தன் வீட்டிற்கு பத்மனாபன் கிளம்பிச் சென்றார்.
புதிய ராணுவ தளபதியாக ஜெனரல் விஜ் பொறுப்பேற்பு


