For Daily Alerts
Just In
ஏப்ரல் முதல் சென்னையில் "செல் ஒன்" சேவை
சென்னை:
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் செல் போன் சேவையான "செல் ஒன்" வரும் ஏப்ரல் மாதம்சென்னையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இது குறித்து சென்னை தொலைபேசியின் தலைமை பொது மேலாளர் எஸ்.எஸ். ஐயர் கூறுகையில்,
"செல் ஒன்" சேவைக்கான 67 சிக்னல் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அடுத்த இரண்டுவாரத்தில் 85 கோபுரங்கள் அமைக்கப்பட்டுவிடும்.
அனைத்துக் கோபுரங்களும் அமைக்கப்பட்ட பின் சோதனை ரீதியிலான சேவை தொடங்கும். ஏப்ரல்மாதம் முதல் முழு அளவிலான சேவை தொடங்கிவிடும்.
துவக்கத்தில் 1.2 லட்சம் இணைப்புகள் வழங்கத் திட்டமிட்டுள்ளோம். டெல்லியிலிருந்து ஒப்புதல்வந்ததும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்றார் ஐயர்.


