For Daily Alerts
Just In
காட்பாடி அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது
காட்பாடி:
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சரக்கு ரயில் ஒன்று இன்று காலை தடம் புரண்டது.
ஆந்திராவிலிருந்து கேரளாவுக்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு ஒரு சரக்கு ரயில் சென்றுகொண்டிருந்தது.
இந்நிலையில் காட்பாடி அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த ரயில் திடீரென்று தடம் புரண்டது. அந்தரயிலின் 10 பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கின.
இதனால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதி வழியாக வந்த ரயில்கள் காட்பாடியில்நிறுத்தப்பட்டு, அதில் வந்த பயணிகள் பஸ்கள் மூலம் உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்கிடையே தண்டவாளத்தைச் சரி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அது முடிந்த உடன் அப்பகுதியில்மீண்டும் ரயில் போக்குவரத்து தொடரும் என்று ரயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.


