For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாக்தாதில் கடும் சண்டை: அமெரிக்க விமானம் வீழ்த்தப்பட்டது

By Staff
Google Oneindia Tamil News

பாக்தாத்:

பாக்தாத் நகர் முழுவதும் அமெரிக்கப் படைகளுக்கும் ஈராக்கியப் படைகளுக்கும் இடையே இடைவிடாது சண்டை நடந்து வருகிறது. இன்றுகாலை டிரக்குகள், லாரிகளில் ஈராக்கியப் படைகள் பாக்தாதின் பல தெருக்களிலும் நுழைந்து கட்டடங்களில் டாங்குகள் எதிர்ப்பு பீரங்கிகள்,ஏவுகணைகளை நிலை நிறுத்தினர்.

நகருக்குள் படிப்படியாக ஊடுருவி வரும் அமெரிக்கப் படைகளை இந்த ஈராக்கியப் படைகள் பல இடங்களில் தாக்கி வருகின்றன. இதனால்நகரமே ரணகளமாகக் காட்சியளிக்கிறது.

பாக்தாதின் தென் கிழக்கே மன்சூர் என்ற பகுதியில் இப்போது கடும் சண்டை நடந்து வருகிறது. இந்தப் பகுதியில் அமெரிக்க விமானங்களும்ஹெலிகாப்டர்களும் தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வருகின்றன.

இன்று காலை ஒரு அமெரிக்க விமானத்தை ஈராக்கியப் படைகள் சுட்டு வீழ்த்தின. இதையடுத்து அந்த விமானம் வீடுகள் அமைந்த பகுதியில்விழுந்தது. கீழே தாக்குதலில் ஈடுபட்டிருந்த அமெரிக்கப் படைகள் அந்த விமானத்தின் பைலட்டை பத்திரமாக மீட்டுவிட்டன.

பாக்தாதின் அல்-ஜசீரா தொலைக்காட்சி அலுவலகம் அமைந்திருந்த கட்டடத்தையும் அமெரிக்கப் படைகள் தாக்கியதோடு அபுதாபி டிவிநிலையத்தின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தின. மேலும் பாலஸ்தீன ஹோட்டல் எனப்படும் பாக்தாதின் 5 நட்சத்திர ஹோட்டல் மீதும்அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தின.

இந்த ஹோட்டலில் தான் பல நாட்டு செய்தியாளர்களும் தங்கியிருந்து செய்திகளை சேகரித்து வருகின்றனர். ஹோட்டலை அமெரிக்கப்படைகள் வேண்டுமென்றே தாக்கியதாக பல செய்தியாளர்களும் புகார் கூறியுள்ளனர். கிட்டதட்ட 4 குண்டுகள் இந்த ஹோட்டலைத்தாக்கின. இதில் பல நிருபர்களும் காயமடைந்துள்ளனர்.

அதே போல பிற நாட்டுத் தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியிலும் அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தின. இந்தத் தூதரகங்களில்யாரும் இல்லை என்றும் அதை ஈராக்கியப் படைகள் பயன்படுத்த ஆரம்பித்திருப்பதால் தூதரகப் பகுதிகள் மீதும் தாக்குதல் நடத்துவதாகஅமெரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்க டாங்கிகுள் நடத்திய தாக்குதலில் பாக்தாதின் முக்கிய நீர் சுத்திகரிப்பு நிலையமும் பெரும் சேதம் அடைந்துள்ளது.

நூற்றுக்கணக்கான அமெரிக்க டாங்குகள், பீரங்கள் பாக்தாதின் பல பகுதிகளிலும் நுழைந்துள்ளன. இந்த டாங்குகளை கட்டடங்களில் இருந்தவண்ணம் ஈராக்கியப் படைகள் தாக்குகின்றன. இதையடுத்து அந்தக் கட்டடங்களையே அமெரிக்கப் படைகள் தகர்த்து தரைமட்டமாக்கிவருகின்றன.

சண்டை மிகக் கடுமையாக இருப்பதாக அந் நகரில் இருந்து தப்பியோடும் மக்கள் கூறுகின்றனர்.

அமெரிக்கப் படைகளை ஈராக்கிய டாங்குகள் நகரில் வட பகுதியில் இருந்தவண்ணம் தாக்குகின்றன. இந்தப் பகுதியில் அமெரிக்கப்படைகள் இன்னும் நுழைய முடியவில்லை. இன்று காலை முதல் பாக்தாதுக்குள் மேலும் 2 கி.மீ. மட்டுமே ஊடுருவ முடிந்ததாக அமெரிக்கப்படைகள் கூறியுள்ளன.

ராக்கெட் லாஞ்சர்கள், கிரனைட்களால் அமெரிக்கப் படைகள் மீது ஈராக்கியப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

தாக்குதல்களில் காயமடைந்து மருத்துவமனைகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக ரெட் கிராஸ்அறிவித்துள்ளது. இதனால் பல தாற்காலிக மருத்துவமனைகளையும் ரெட்கிராஸ் நகரின் பல பகுதிகளிலும் அமைத்துள்ளது.

பாக்தாதுக்குள் அமெரிக்கப் படைகள் நுழைந்தது முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மிக பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில்சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் நகரில் மின் தடை ஏற்பட்டுள்ளதால் குடிநீருக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் நகரின் பல இடங்களிலும் மூடப்பட்டுள்ள கடைகள் உடைக்கப்பட்டு பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் பாக்தாதில் உள்ள அல்-ரஷீத் விமான தளத்தையும் பிடித்துவிட்டதாக அமெரிக்கப் படைகள் கூறியுள்ளன.

ஈராக் விவகாரம் குறித்து விவாதிக்க வடக்கு ஐயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகருக்கு வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சும் இங்கிலாந்துப்பிரதமர் டோனி பிளேரும் கடந்த இரு நாட்களாக தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X