மஞ்சள் துண்டை கைவிட்டார் கருணாநிதி: கறுப்புத் துண்டுக்கு மாறினார்
சென்னை:
கடந்த பல வருடங்களாக எப்போதும் கழுத்தில் மஞ்சள் துண்டுடன் காணப்படும் திமுக தலைவர்கருணாநிதி அதைக் கைவிட்டார். நேற்று முதல் கறுப்புத் துண்டுடன் வலம் வர ஆரம்பித்துள்ளார்.நேற்று விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக நடத்திய கறுப்புக் கொடி போராட்டத்தை முன்னிட்டுஅவரும் கறுப்புத் துண்டு அணிந்து வந்தார்.
இலவச மின்சாரத்தை ரத்து செய்ததைக் கண்டித்து திக, காங்கிரஸ், பாமக, மதிக உள்ளிட்டபல்வேறு எதிர்க்கட்சிகள், விவசாய அமைப்புகள், தமிழகம் முழுவதிலும் நேற்று மாவட்டத்தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கறுப்புக் கொடிகளை கையில் ஏந்தியும், கறுப்பு உடை அணிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்கலந்துகொண்டனர். இதையொட்டி, கருணாநிதியும் நேற்று கறுப்புக்கு மாறினார்.
கடந்த 6 வருடங்களுக்கு முன் திடீரென கருணாநிதி மஞ்சள் துண்டுக்கு மாறினார். யாரோ ஜோதிடர்சொல்லித் தான் அவர் மஞ்சளுக்கு மாறியதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், ஏதேதோகாரணங்கள் சொல்லி மழுப்பி வந்தார்.
இந்நிலையில்தான் நேற்று கறுப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது. திமுக உள்ளிட்ட அனைத்துஎதிர்க் கட்சித் தொண்டர்களும், விவசாயிகளும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
திமுக தொண்டர்கள் அனைவரும் கறுப்பு உடை அல்லது கறுப்புத் துண்டு அணிந்து கொண்டுபோராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருந்தார். அதன்படியேதொண்டர்கள் கறுப்பு உடை அணிந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அவர்களுக்குக் கூறியதுதான் தனக்கும் பொருந்தும் என்று கருதிய கருணாநிதி, தானும் நேற்றுகறுப்புத் துண்டு அணிந்தே காணப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று மஞ்சள் துண்டுக்கு விடைகொடுத்திருந்தார்.
திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் பணியாற்றும் ஊழியர்களும் கறுப்பு உடையுடன்வந்திருந்தனர்.
இந்த கருப்புத் துண்டு தொடருமா இல்லை மீண்டும் மஞ்சளுக்கு மாறிவிடுவாரா என்றுதெரியவில்லை.


