For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எனக்கு மரியாதை இல்லையா?: ஜெ. ஆவேசம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பிரதமர் வாஜ்பாயின் இருக்கையின் அருகில் தனக்கு இருக்கை போடப்படாததால்தான்இவ்விழாவைப் புறக்கணித்ததாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதற்கு திமுகவின் திட்டமிட்டசதியே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று மாலை சென்னை விமான நிலையத்தில் வாஜ்பாய் கலந்து கொண்ட விழாவை ஜெயலலிதாபுறக்கணித்தார். இது தொடர்பாக அதிமுக மறைமுக ஆதரவாளரான பார்வர்டு பிளாக் எம்.எல்.ஏ.சந்தானம் இன்று சட்டசபையில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து ஜெயலலிதா பேசுகையில்,

விமான நிலையத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா நிகழ்ச்சி கடந்த மாதம் 14ம் தேதியே நடைபெறஇருந்தது. அதில் துணைப் பிரதமர் அத்வானி கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.அந்தக் கட்டடத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரும் வைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், திடீரென்று அந்த விழா ஒத்திவைக்கப்பட்டது. மே 4ம் தேதி விழா நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டது. அதில் பிரதமர் பங்கேற்பார் என்றும் எம்.ஜி.ஆர். பெயரெல்லாம் சூட்டப்படாதுஎன்றும் கூறப்பட்டது.ஆனால் இவ்விழாவில் நானும் கலந்து கொள்கிறேனா என்பது குறித்துஎதுவும் எனக்குத் தெரிவிக்கப்படவில்லை.

மே 2ம் தேதி தான் இந்த விழாவுக்கான ஒரு அழைப்பிதழே அரசுக்கு வந்தது. 3ம் தேதி, அதாவதுவிழாவுக்கு முந்தைய நாள் எனக்கு விமானத்துறை அமைச்சர் ஷானவாஸ் ஹூசேனின்அலுவலகத்தில் இருந்து ஒரு பேக்ஸ் வந்தது. அதில், இவ்விழாவின் முதன்மை விருந்தினராக நான்அழைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், விழா அழைப்பிதழில் ஆலந்தூர் தொகுதி எம்.எல்.ஏவும் தமிழக சமூக நலத் துறைஅமைச்சருமான வளர்மதியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இந்த விழாவுக்கும் அவர்அழைக்கப்படவில்லை. ஆனால் விழாவுக்குச் சிறிதும் சம்பந்தமே இல்லாத தாம்பரம் தொகுதி திமுகஎம்.எல்.ஏவான வைத்தியலிங்கத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் 4ம் தேதி தமிழக பொதுப்பணித்துறையிடம் இருந்து எனக்கு ஒரு குறிப்பு வந்தது.அதில், பிரதமரை வரவேற்க விமான நிலையம் செல்லுமாறு கூறப்பட்டிருந்தது. உடனே நான்பொதுப்பணித் துறையைத் தொடர்பு கொண்டு பேசினேன்.

அப்போது எனக்கு விழாவில் கலந்து கொள்ள முறைப்படியான அழைப்பிதழ் அனுப்பப்படவில்லைஎன்று தகவல் கிடைத்தது. இருந்தாலும் மரியாதைப்படி பிரதமரை வரவேற்க முதல்வர் என்றமுறையில் விமான நிலையத்திற்குச் சென்று அவரை வரவேற்றேன்.

மரபுப் படி பிரதமர் இருக்கைக்கு அருகில்தான் முதல்வரான எனக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால், எனக்கு மேடையின் ஓரத்தில் தான் இருக்கை போடப்பட்டிருப்பதாக மத்தியஅரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரதமருக்கு இரு பக்கங்களிலும் தமிழக ஆளுநருக்கும், மத்திய அமைச்சர் பாலுவுக்கும்தான்இருக்கைகள் போடப்பட்டிருந்தன. முதல்வர் என்ற முறையில் எனக்கு உரிய மரியாதைதரப்படாததால்தான் இவ்விழாவில் நான் கலந்து கொள்ளவில்லை.

ஜெயலலிதா என்ற தனி மனுஷியாக என்னை மதித்து இருக்கை போடப்பட்டிருக்க வேண்டும் எனநான் கூறவில்லை. ஆனால் மரபுப்படி முதல்வர் என்ற மரியாதைக்காவது பிரதமர் இருக்கையின்அருகில் என்னுடைய இருக்கையைப் போட்டிருக்க வேண்டும்.

திமுக தலைவர் கருணாநிதி செய்த திட்டமிட்ட சதி காரணமாகத்தான் மேடையில் என்னுடையஇருக்கை மாற்றப்பட்டது. கருணாநிதியுடன் பேசிய பின்னர் பாலுதான் இவ்வாறு இருக்கைகளைஇடம் மாற்ற உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல் புதிய விமான நிலையக் கட்டடத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் வைக்கப்படும் என்றுவிமானப் போக்குவரத்துத் துறை முதலில் முடிவு செய்திருந்தது. ஆனால் எம்.ஜி.ஆர். பெயர்வைக்கப்படவில்லை. இதற்கும் பாலுதான் காரணம்.

பிரதமருடன் தங்களுக்குள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி என்னைக் கேவலப்படுத்தும்செயல்களிலும், தமிழக அரசை மட்டும் தட்டும் முயற்சிகளிலும் திமுக ஈடுபட்டுள்ளது. ஆனால்இதனால் எல்லாம் நாங்கள் ஒடுங்கி விட மாட்டோம்.

இவ்வளவு சதிச் செயலுக்கும் காரணமான பாலு, இப்போது நான் அந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை என்று குற்றம் சாட்டி முதலைக் கண்ணீர் வடிக்கிறார்.

இதுபோன்ற சதிச் செயல்களில் ஈடுபடாமல் வறட்சி நிவாரணத் தொகையை மத்திய அரசிடமிருந்துவாங்கித் தருவதிலும், உரிய காவிரி நீரை தமிழக விவசாயிகளுக்குக் கிடைக்கச் செய்வதிலும் திமுகஆர்வம் காட்டினால் மக்களுக்காவது பிரயோஜனமாக இருக்கும் என்றார் ஜெயலலிதா.

இருக்கை மாற்றம் நடந்தது எப்படி?

முதலில் திட்டமிட்டபடி பிரதமரின் இரு புறமும் ஆளுநர் ராம்மோகன் ராவுக்கும், மத்திய விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷானவாஸ் ஹூசேனுக்கும் தான் இருக்கை போடப்பட்டிருந்தது. இதில்ஹூசேனுக்கு அடுத்து டி.ஆர்.பாலுவுக்கும், ஆளுநருக்கு அடுத்ததாக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இருக்கைபோடப்பட்டிருந்தது.

விமான நிலைய புரோடோகால் அதிகாரிகளிடம் விசாரித்தபோது இந்த விவரம் தெரியவந்தது. இதன்படிஜெயலலிதாவையும் பாலுவையும் தன் அருகே உட்கார விடாமல் தடுக்க பிரதமர் திட்டமிட்டிருந்ததாகத்தெரிகிறது.

ஆனால், பாலு தனக்கு ஓரத்தில் இருக்கை போடப்பட்டுள்ளதை ஹூசேனிடம் சொல்ல அவர் விமான நிலையஅதிகாரிகளை அழைத்து, இது மத்திய அரசு விழாவாக இருந்தாலும், இது தமிழ்நாடு. இங்கு தமிழகத்தைச்சேர்ந்த மத்திய அமைச்சருக்குத் தான் முக்கியத்துவம் தர வேண்டும். மேலும் கேபினட்டில் எனக்கு சீனியரான பாலுதான் பிரதமர் அருகே அமர வேண்டும். எனது இருக்கையை பாலுவுக்கு ஒதுக்குங்கள்என்று உத்தரவிட்டதாகத்தெரிகிறது.

அதை வாஜ்பாயிடம் ஹூசேன் கூறிவிட்டார். வாஜ்பாயும் அதை ஏற்றுக் கொண்டுவிட்டார். அதே நேரத்தில்ஜெயலலிதாவின் இருக்கை பிரதமருக்கு இடது புறம் ஆளுநருக்கும் அடுத்தபடியாக ஓரத்திலேயே இருந்தது.ஜெயலலிதாவுக்கு வாஜ்பாய்க்கு அருகே இடம் தருவதாக இருந்தால் ஆளுநரை இடம் மாற்ற வேண்டும். அதைவாஜ்பாய் விரும்பவில்லை.

இதனால் ஜெயலலிதாவை ஓரத்திலேயே வைக்குமாறு வாஜ்பாய் கூறிவிட்டதாகத் தெரிகிறது. ஜெயலலிதா வராமல்போனதால் அந்த இடத்தில் திருநாவுக்கரசரை உட்கார வைத்தனர் அதிகாரிகள்.

இருக்கை விவகாரத்தை முதல்வர் ஜெயலலிதா பிரச்சனையாகச் சொன்னாலும் பா.ஜ.க. கூட்டணியில் தன்னைச் சேரவிடாமல் தடுப்பதே வாஜ்பாய் தான் என்று அவர் நினைப்பதே முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. காஞ்சிமடத்தின் மூலமாக அத்வானியை நெருங்கிவிட்டாலும் கூட வாஜ்பாயின் மனதைக் கவர முடியாமல் அதிமுக திணறிவருகிறது.

இது முதல் முறையல்ல..

மத்திய அரசுடன் புரோடாகால் விஷயத்தில் ஜெயலலிதா மோதுவது இது முதல்முறையல்ல. ஜனாதிபதி அப்துல்கலாம் பதவியேற்ற போதும் தனக்கு உரிய அழைப்பு அனுப்பப்படவில்லை என்று சொல்லி நிகழ்ச்சியைப்புறக்கணித்தார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X