For Daily Alerts
Just In
குடிமகன்களுக்கு ஷாக்!
சென்னை:
தமிழக "குடிமகன்களின்" போதையைத் தெளிய வைக்கும் செய்தி இது.
ஜூன் 1ம் தேதி முதல் மதுபானங்களின் விலையை உயர்த்தப் போவதாக மதுபானவிற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மதுபான கொள்முதல் வரியை அரசு 10 சதவீதமாக அதிகரித்துவிட்டதால், ஜூன் 1ம் தேதி முதல்அனைத்து வகை மதுபானங்களின் விலையும் உயருகிறது.
அதன்படி நெப்போலியன் குவார்ட்டர் பிராந்தி ரூ. 74க்கும், குவார்ட்டர் விஸ்கி ரூ.73க்கும்விற்கப்படுமாம்.
மலிவு விலை மது ரூ. 50லிருந்து ரூ. 55 ஆக அதிகரிக்கப்படுகிறது. அத்தோடு பீரின் விலையும்உயருகிறது.
கிங் பிஷர் பீர் ரூ. 72க்கும், பிளாக் நைட் ரூ. 72க்கும், புல்லட் பீர் ரூ. 77ஆகவும், கோல்டன் ஈகிள் ரூ.66க்கும் விற்கப்படும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.
இனிமேலாவது நம்மவர்கள் தெளிவடைந்தால் சரி!


