மலேசியா: 52 இந்தியர்களுக்கும் நியாயம் கிடைத்தது
கோலாலம்பூர்:
எஜெண்டுகளால் ஏமாற்றப்பட்ட 52 இந்தியத் தொழிலாளர்களுக்கும் உடனடியாக முழு சம்பள பாக்கியையும்,அவர்களது வழக்குச் செலவுகளையும், விமான டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தையும் தருமாறு மலேசியதொழிற்சாலைக்கு அந் நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மலேசியாவில் புகிட் மெர்டஜாம் என்ற இடத்தில் உள்ள சின் வெல் பாஸ்ட்னர்ஸ் தொழிற்சாலை உள்ளது. இங்குபணிபுரியும் 52 இந்தியர்கள் அந்த தொழிற்சாலைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர்.
சின் வெல் பாஸ்ட்னர்ஸ் நிர்வாகத்தினர் தங்களுக்கு மாதம் 750 ரிங்கிட் (ரூ. 10,000) தருவதாகக் கூறிவிட்டு 350ரிங்கிட் (ரூ. 4,600) மட்டும் வழங்கி வருவதாகவும், அதையும் கூட சரியாகத் தராமல் இழுத்தடிப்பதாகவும்,அதைத் தட்டிக் கேட்டால் வேலையை விட்டு நீக்குவதாக மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோலாலம்பூரில் உள்ள மலேசிய உயர் நீதிமன்றத்தில் கடந்த ஓராண்டு காலமாக நடந்துவந்தது. இதில் இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தனது தீர்ப்பில் நீதிபதி கமலநாதன் ரத்னம் கூறியதாவது:
ஒப்புக் கொள்ளப்பட்ட ஊதியத்தை சின் வெல் பாஸ்ட்னர்ஸ் நிறுவனம் ஒரு வாரத்துக்குள் ஊழியர்களுக்குத் தரவேண்டும். பாக்கித் தொகையையும் தர வேண்டும்.
மேலும் இந்த வேலையைப் பெற ஏஜெண்டுக்கு இந்த 52 பேரும் தலா ரூ. 50,000 வரை பணம் கொடுத்துள்ளனர்.அதையும் இந்த நிறுவனம் தான் திரும்பித் தர வேண்டும். இந்த ஊழியர்கள் இந்தியா சென்று வரவும் இருடிக்கெட்டுகளுக்கான கட்டணத்தையும் தர வேண்டும்.
நல்ல வேலை, நல்ல ஊதியம் என்று ஆசைக் காட்டப்பட்டு இந்த ஏழைத் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டதுகவலையும் வேதனையும் தருகிறது.
மேலும் இவர்களுக்கு வேலைக்குச் சேர்ந்துவிட்ட ஏஜெண்டுகளுக்கு நிறுவனம் வழங்கிய கமிஷனையும் திரும்பப்பெற்றுக் கொள்ளலாம். அந்த ஏஜெண்டுகள் பணத்தை திருப்பித் தந்துவிட வேண்டும்.
இவ்வாறு தனது உத்தரவில் நீதிபதி கமலநாதன் ரத்னம் கூறினார்.முன்னதாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.கே. நாதன், மலேசியாவில் நல்ல வேலை வாங்கித் தருவதாகக்கூறி இந்தியர்களை இந்தியாவில் உள்ள ஏஜெண்டுகள் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர். இந்த வழக்கில்மலேசியாவில் உள்ள இந்திய ஏஜெண்டான அமர்ஜீத் சிங் என்பர் நீதிமன்றத்தில் பல பொய்யான தகவல்களைத்தந்துள்ளார் என்றார்.
சின் வெல் பாஸ்ட்னர்ஸ் தவிர மலேசியாவில் உள்ள கோபிஸ் கன்ஸ்ட்ரக்ஷன், டோங் யொங் மெடல்ஸ் ஆகியஇரு நிறுவனங்களும் இந்தியர்களை வேலைக்கு அமர்த்திவிட்டு உரிய ஊதியம் தராமல் பிரச்சனை செய்துவருகின்றன.
இதில் கோபிஸ் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துக்கு சென்னையைச் சேர்ந்த டூர்ஸ் மெட்ராஸ் லிமிடெட் என்ற நிறுவனம்அடிமாட்டு விலைக்கு தொழிலாளர்களைப் பிடித்துத் தந்துள்ளது.
சின் வெல் மற்றும் டோங் யொங் ஆகிய நிறுவனங்களுக்கு சென்னையில் உள்ள மிதுன் டிராவல்ஸ் என்ற நிறுவனம்மலேசியாவைச் சேர்ந்த அமர்ஜித் சிங் என்ற ஏஜெண்ட் மூலம் தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகத்தில் இருந்துஆட்களை அனுப்பியது.
இந்த மூன்று நிறுவனங்களுமே கடைசியில் தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சிவிட்டு ஏமாற்றிவிட்டன.


