காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடிக்கு வாய்ப்பு அதிகரிப்பு
சேலம்:
கர்நாடகாவின் கபினி அணைந்து தொடர்ந்து திறந்து விடப்பட்டால், காவிரி டெல்டாப் பகுதியில் இந்த ஆண்டுகுறுவை சாகுபடி நடக்க வாய்ப்புள்ளதாக மேட்டூர் அணையின் பொதுப் பணித்துறை தலைமைப் பொறியாளர்மீனாட்சி சுந்தரம் கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் கன மழை பெய்து வருகிறது. இதனால் கபினி அணையில் நீர் வெகுவாக உயர்ந்து வருகிறது. இதன்காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி, கர்நாடக அரசு நீரைத் திறந்து விட்டுள்ளது.
இதனால் விநாடிக்கு 2,360 கன அடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டுள்ளது. இதே நிலை அடுத்த 15நாட்களுக்கு நீடித்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயரும்.
இதனால் காவிரி டெல்டா பகுதியில் குறுவை நெல் சாகுபடியை மேற்கொள்ள முடியும்.
வழக்கமாக அணையின் நீர் மட்டம் 90 அடியாக உயர்ந்தால் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுவதுவழக்கம். இந்த முறை அதைவிடக் குறைவாகவே நீர் மட்டம் உயர்ந்தாலும் குறுவைக்காக தண்ணீரைத் திறக்கத்தயாராக இருப்பதாக மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு குறுவையோடு, சம்பா, தாளடி பருவ நெல் விளைச்சலும் கர்நாடகத்தின் பிடிவாதத்தால்பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது கடும் மழையால் தனது அணையைக் காப்பாற்றிக் கொள்ளதமிழகத்துக்குத் தண்ணீரைத் திறந்து வேண்டிய கட்டாயத்திற்கு கர்நாடகம் தள்ளப்பட்டுள்ளது.


