For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலீசாருடன் மோதல்: பிரபல ரெளடி அயோத்திக் குப்பம் வீரமணி சுட்டுக் கொலை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தின் மிக பயங்கரமான ரெளடிகளில் ஒருவனான அயோத்திகுப்பம் வீரமணி இன்று பட்டப் பகலில்போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

சென்னை திருவல்லிக்கேணி அருகே உள்ள மீனவர் குப்பமான அயோத்திக் குப்பத்தைச் சேர்ந்தவன் இவன்.மீனவர்கள் உள்ளிட்ட பலரை உள்ளடக்கிய பெரிய ரெளடிக் கும்பலை தலைமையேற்று நடத்தி வந்தான்.

கழுத்தில் சைக்கிள் செயின் தடிமனில் சில தங்கச் சங்கிலிகள், உடலெங்கும் தங்கம், லேட்டஸ்ட் கார்கள், எப்போதும்தன்னைச் சுற்றி பாதுகாப்புப் படை என திரிந்தவன். கொலை, வழிப்பறி, கட்டப் பஞ்சாயத்து, கொள்ளை, கடத்தல்என பணத்துக்காக எதையும் செய்யும் வீரமணிக்கு லோக்கல் அரசியல் செல்வாக்கும் உண்டு.

சென்னையில் பல விசைப் படகுகளை வைத்து மீன் பிடிக்கும் தொழில் செய்து வரும் இவனுக்கு கள்ளச் சாராயதொழிலும் உண்டு. தமிழகம் தவிர ஆந்திராவிலும் சொத்துக்கள் உண்டு.

வழக்கமாக ஏதாவது ஒரு வழக்கில் கைதாவதும், பின்னர் ஜாமீனில் வெளியே வந்து தனது ரெளடித்தனத்தைதொடர்வதும் இவனுக்கு வாடிக்கை. இதற்காக பல வழக்கறிஞர்களை எப்போதும் தயாராக வைத்திருப்பான்.

அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு வீரமணியின் கொட்டம் அடக்கப்பட்டு அடக்கி வைக்கப்பட்டான்.குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு தான் விடுதலையாகிவெளியே வந்தான்.

இவன் மீது 21 கொலை, கொலை முயற்சி, கொள்ளே, கடத்தல் வழக்குகள் விசாரணையில்உள்ளன. அந்த வழக்குகளில் இருந்து இப்போது ஜாமீனில் தான் இவன் வெளியே இருந்தான்.

இந் நிலையில் ஒரு கொலை வழக்கு தொடர்பாக அவரைப் பிடிக்க போலீஸார் முடிவு செய்தனர்.ஆனால், போலீசாரிடம் சிக்காமல் இருந்து வந்தான். ஆந்திராவில் தஞ்சம் புகுந்திருந்த இவன்,சமீபத்தில் அயோத்திக் குப்பத்துக்கு திரும்பியது போலீசாருக்குத் தெரியவந்தது.

இதையடுத்து இவனைப் பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். நேரடியாக போலீஸ் படை சென்றால்,வீரமணி கும்பலும் மற்றும் அயோத்திக்குப்பவாசிகள் பிரச்சினை செய்வாார்கள் என்பதால்கிங்க்ஸ்லி மற்றும் வெள்ளைத்துரை ஆகிய இரு சப்-இன்ஸ்பெக்டர்களும் மாறு வேடத்தில்அயோத்தி குப்பத்திற்குச் சென்றனர்.

போலீஸ் படை தொலைவில் ஒரு காரில் நின்று கொண்டது. வீரமணி ஒரு கடையில் ஜூஸ்சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனை போலீஸார் நெருங்கியபோது, வீரமணி அவர்களைஅடையாளம் கண்டு கொண்டான்.

உடனே தன்னிடமிருந்த துப்பாக்கியால் சப்-இன்ஸ்பெக்டர்கள் மீது சரமாரியாக சுட்டுள்ளான்.அவனுடன் இருந்தவர்கள் அரிவாள்களால் சப் இஸ்பெக்டர்களைத் தாக்கினர். இதில் அவர்களுக்குவெட்டுக் காயம் விழுந்தது. இதையடுத்து இரு சப்-இன்ஸ்பெக்டர்களும் திருப்பிச் சுட்டனர்.

இதில் வீரமணியின் உடலில் 5 குண்டுகள் பாயந்தன. இதைத் தொடர்ந்து போலீஸ் படை விரைந்துவந்த அவனது உடலை அள்ளிக் கொண்டு அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்தது. ஆனால்,அவன் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து ராயப்பேட்டை அரசினர் மருத்துவமனைக்கு அவனது உடல் கொண்டுசெல்லப்பட்டது.

காயமடைந்த இரு சப்-இன்ஸ்பெக்டர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீரமணி கொல்லப்பட்ட சம்பவம் சென்னையில், குறிப்பாக அயோத்திகுப்பம், திருவல்லிக்கேணி,ஐஸ் ஹவுஸ் மற்றும் வட சென்னை பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸார்தான் வேண்டும் என்றே வீரமணியை சுட்டுக் கொன்று விட்டதாகவும், கரையில்நிறுத்தப்பட்டிருந்த ஒரு விசைப் படகில் தனது கூட்டாளிகளுடன் வீரமணி பேசிக்கொண்டிருக்கும்போது காரில் வந்த போலீசார் வீரமணியை சரமாரியாச் சுட்டுக் கொன்றதாகஅயோத்தி குப்பவாசிகள் கூறுகின்றனர்.

ஆனால், போலீசாரோ தங்களை வீரமணி சுட்டதால் தான் திருப்பிச் சுட்டதாகவும், தாக்குதல் நடந்ததுஒரு ஜூஸ் கடையில் தான் என்றும் கூறுகின்றனர்.

பல்வேறு கட்சிகளின் அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய வீரமணி சில ஆண்டுகளுக்கு முன்சென்னைக் கடற்கரையில் நடந்த திமுக பேரணியின்போது, கலவரத்தைத் தூண்டினார் என்றசர்ச்சையும் எழுந்தது.

பேரணி நடத்திய திமுகவினரை வீரமணியும் ரெளடிக் கும்பலும் ஓட, ஓட விரட்டி வெட்டியது.அப்போதைய சென்னை போலீஸ் கமிஷ்னர் முத்துக் கருப்பன் சொல்லித் தான் வீரமணி அந்தத்தாக்குதலை நடத்தியதாக திமுக குற்றம் சாட்டியது.

இதையடுத்து அவன் மீது அதிமுக ரெளடி முத்திரை விழுந்தது. ஆனால், முத்துக் கருப்பனைசென்னையில் இருந்து தூக்கி அடித்த கையோடு வீரமணியையும் பிடித்து குண்டர் சட்டத்தில் உள்ளேபோட்டது தமிழக அரசு.

அவனை ஏதாவது ஒரு வழக்கில் கைது செய்து. எப்போதும் சிறையிலேயே வைத்திருக்கும்முயற்சியில் சென்னை போலீசார் ஈடுபட்டிருந்தனர். இதனால் சமீபத்தில் வெளியே வந்த வீரமணிகிட்டத்தட்ட தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தான்.

இந் நிலையில் இப்போது போலீசார் அவனை சுட்டுக் கொன்றுள்ளனர்.

முன்னதாக காரில் வந்த ஒரு கும்பல் வீரமணியை சுட்டுவிட்டுத் தப்பியதாக தகவல் வந்தது. இதனால்அவனது எதிர் கோஷ்டி தான் தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும் என்று நம்பப்பட்டது.

அதன் பின்னர் தான் தாக்குதல் நடத்தியது போலீஸ் தான் என்ற விவரம் தெரியவந்தது.

இச் சம்பவத்தால் அயோத்திக் குப்பம் உள்பட வட சென்னை முழுவதும் பெரும் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளதால், ஏராளமான போலீசார் அயோத்திக் குப்பத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன் இவனது கொட்டம் மிக அதிகமானபோது அதை அடக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர்இணை கமிஷ்னர் சைலேந்திரபாபு. இவனை கடலோரக் காவல் படையின் உதவியுடன் நடுக்கடலில் மடக்கிப்பிடித்தார் பாபு.

இப்போது சென்னை போலீஸ் கமிஷ்னர் விஜய்குமாரின் முயற்சியால் இவன் அடக்கப்பட்டிருந்தான். இருப்பினும்இவன் சிறைக்கு வெளியே இருந்த ஒவ்வொரு நிமிடத்தையும் போலீசார் டென்சனுடன் தான் கடத்த வேண்டிஇருந்தது.

கொலைகளை மிகச் சாதாரணமாக செய்து வந்த ரெளடி, அதே பாணியில் கொல்லப்பட்டுள்ளான்.சம்பவத்தையடுத்து அயோத்தி குப்பத்துக்கு வந்த கமிஷ்னர் விஜய்குமார் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில்பார்வையிட்டுத் திரும்பினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X