விழுப்புரத்தை குலுக்கிய திமுகவின் பிரமாண்ட பேரணி: ஸ்தம்பித்தது சென்னை- திருச்சி நெடுஞ்சாலை
விழுப்புரம்:
![]() |
இதனால் திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பல மணி நேரம் ஸ்தம்பித்தது.
விழுப்புரம், அண்ணாநகரில் திமுக மாவட்ட மாநாடு பிரமாண்ட பேரணியுடன் தொடங்கியது.மாநாட்டையொட்டி, தமிழகம் முழுவதிலுமிருந்தும் லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள், விழுப்புரத்தில்குவிந்துள்ளதால் எங்கு நோக்கினும் திமுக தலைகளாகவே தெரிகிறது.
நகர் முழுவதும் திமுக கொடிகள், தோரணங்களே வியாபித்துள்ளன. பேரணிக்கு வந்த திமுகவினரின் கூட்டம்உளவுப் பிரிவு போலீசாரையே மூக்கில் விரலை வைக்கச் செய்துள்ளது.
முன்னதாக நகருக்குள் இந்தப் பேரணியை நடத்த போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் நகருக்குவெளியிலேயே பல இடங்களில் திமுகவினர் தங்களது வாகனங்களை விட்டு இறங்கி கருணாநிதி அமர்ந்திருந்தமேடையை நோக்கி வரத் தொடங்கினர்.
முதலில் சில நூறு பேராக ஆரம்பித்த இந்த எண்ணிக்கை ஆயிரமாகி, லட்சக்கணக்கானது. இதனால் திருச்சி-சென்னை நெடுஞ்சாலையே ஸ்தம்பித்துப் போனது. இதையடுத்து இவர்கள் இளைஞர் அணியினரால்முறைப்படுத்தப்பட்டு பேரணியாக ஒரு திசையில் நடக்க வைக்கப்பட்டனர்.
சுமார் 5 மணி நேரம் இந்த பிரமாண்டமான பேரணி நடந்தது.
திமுக தொண்டர்களின் பிரமாண்ட கூட்டத்தால், திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாகபாதிக்கப்பட்டது. சாலைகளில் வாகனங்கள் பல கி.மீ. தூரத்துக்கு நின்றிருந்தன.
மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியின் முக்கியத் தலைவர்கள் பேசுகின்றனர்.

