For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பா.ஜ.க. தலைவர்களுக்கு நாகரீகம் தெரியவில்லை: திமுக

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இல.கணேசன் நாகரீகம் இல்லாமல் திமுகவை விமர்சித்து வருவதாக அந்தக் கட்சியின் விழுப்புரம் மாவட்டத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

மத்திய அமைச்சர் திருநாவுக்கரசரும், பா.ஜ.க. செயலாளர் இல.கணேசனும் அவர்களது செயற்குழுவில் பேசியதாகஒரு வார இதழில் சில செய்திகளைப் படித்தபோது வியப்பாகவும் வேடிக்கையாகவும் இருந்தது.

இந்தியா முழுவதும் லட்சம் கிளைகள் வைத்திருந்தது போலவும் அவைகளைக் கலைத்துவிட்டுத் தான் பா.ஜ.கவில்இணைந்தது போலவும் திருநாவுக்கரசர் பேசியிருக்கிறார். மத்திய அமைச்சர் பதவிக்காகத் தான் தனது கட்சியையேகலைத்தார் அவர் என்பதை நாடறியும். டெல்லி, கேரளம், ஆந்திரத்தில் திமுகவுக்கு ஆட்கள் இல்லையே என்றுகிண்டல் பேசியிருக்கிறார்.

திருநாவுக்கரசர் மத்திய அமைச்சரான பிறகாவது அந்தமானுக்குச் சென்றிருப்பார் என்று நினைக்கிறேன். அல்லதுபத்திரிக்கை செய்திகளையாவது படித்திருப்பார் என்று நம்புகிறேன். அந்தமானில் கடந்த ஆண்டு செய்து கொண்டஏற்பாட்டின்படி திமுகவின் ஆதரவுடன் தான் பா.ஜ.கவைச் சேர்ந்தவர் இரண்டு நாட்களுக்கு முன் நகர்மன்றத்தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இது தெரியாமல் கருணாநிதியை கேலி செய்யும் திருநாவுக்கரசரை முதலில் பா.ஜ.கவினர் ஏற்றுக்கொண்டிருக்கிறார்களா என்பதை அவரை நன்கு அறிவார். ஆட்சி மாறினால் கட்சியையும் மாற்றும் திறமைமிக்கவராயிற்றே திருநாவுக்கரசர்.

எங்களை நாத்திகர் என்று சொல்லிக் கொள்வில் பெருமைப்பட்டுக் கொள்பவர்கள் நாங்கள். ஆனால்,இல.கணேசன் என்ற அதிர்ஷ்டசாலி துரதிஷ்டவசமாக நாத்திக ஆட்சி கொண்டு வந்ததாக எங்களை விமர்சித்தார்.ஆத்திகமா, நாத்திகமா என்பதல்ல பிரச்சனை. திமுக ஆட்சியை துரதிஷ்டவசமான ஆட்சி என்று சொன்னது தான்பிரச்சனை. ஒரு வேளை அப்படிச் செல்வது தான் கூட்டணி தர்மம் போலும் (திமுக கூட்டணி தர்மத்தைமதிக்கவில்லை என கணேசன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது).

முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் 1967ல் திமுக வெற்றி பெற்றதைப் பார்த்து விஷக் கிருமிகள் பரவுகின்றன என்றுசொல்ல, அதற்கு எதிர்ப்பு வந்தவுடன் அவ்வாறு சொல்லவில்லை என்று சொல்லி வருத்தம் தெரிவித்தார். அதுஅவருடைய பெருந்தன்மை.

ஆனால், அத்தகைய பெருந்தன்மையை இல.கணேசன் போன்றவர்களிடம் எதிர்பார்ப்பது தவறு என்பது அவதுமழுப்பல் பதில்களும், கேலிப் பேச்சுக்களும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

இனிமேலாவது, முடிந்தால் பா.ஜ.க. தலைவர்கள் நாகரீகமாக நடந்து கொள்வார்கள் என்று நம்புவோமாக.

இவ்வாறு பொன்முடி மூலம் வெளியிட்ட அறிக்கையில் திமுக கூறியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X