For Quick Alerts
For Daily Alerts
Just In
56ன் அட்டகாசம்: அலறிய 65!
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி என்ற இடத்தில் 65 வயது மூதாட்டியை ஈவ் டீசிங் செய்ததாக(!) 56 வயதுமுதியவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருச்சுழி அருகே உள்ள மேல்உடைகுளம் என்ற ஊரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 56 ). இதே பகுதியைச்சேர்ந்த 65 வயது மூதாட்டி ஒருவர் ரேஷன் கடையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, அந்த மூதாட்டியை வழி மறித்த கோவிந்தராஜ், கேலியும்,கிண்டலும் செய்துள்ளார். மேலும் மிகஆபாசமாகவும் பேசினாராம்.
இது குறித்து அந்த மூதாட்டி போலீஸில் புகார் கொடுக்கவே, சேட்டை செய்த கோவிந்தராஜை போலீஸார் கைதுசெய்தனர்.

