துணைவேந்தர் மீது வழக்குப் பதிவு: விசாரணை தொடங்கியது
சென்னை:
சேலம் பெரயார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சேதுபதி ராமலிங்கம் மீது அவரது மருமகள் சங்கீதா சுமத்தியுள்ளசெக்ஸ் கொடுமை, வரதட்சணைப் புகார் குறித்து போலீசார் முறைப்படி வழக்குப் பதிவு செய்து விசாரணையைததொடங்கிவிட்டனர்.
இதற்கிடையே கைதாகாமல் தப்பும் வகையில் முன் ஜாமீன் கோரி துணை வேந்தர் குடும்பத்தினர் தாக்கல்செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி இன்று சங்கீதா உயர் நீதிமன்றத்தில் புதிய மனுதாக்கல் செய்துள்ளார்.
முன்னதாக சேதுபதி ராமலிங்கத்தின் மீது சங்கீதா தர்மபுரி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்பெரியய்யாவிடம் கொடுத்த புகாரில்,
துணைவேந்தர் சேதுபதி ராமலிங்கம், தன்னிடம் பாலியல் விஷமனத்தனம் செய்ததாகவும், பாலியல் உறவுக்குவற்புறுத்தியதாகவும், வரதட்சணை கேட்டு அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்துவதாகவும்தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கிருஷ்ணகிரி சரக போலீஸாருக்கு பெரியய்யாஉத்தரவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து சேதுபதி ராமலிங்கம் மற்றும் சங்கீதா வசித்து வரும் சேலம் போலீஸாருக்கு இந்தப் புகார்அனுப்பப்பட்டது.
சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சேதுபதி ராமலிங்கம், அவரது மனைவி ஜோதி, மகள்மீனாட்சி, அவரது கணவர் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைதொடங்கியுள்ளது.
துணை வேந்தர் குடும்பத்தின் இந்த முன் ஜாமீன் கோரிக்கையை எதிர்த்து சங்கீதா இன்று தாக்கல் செய்த மனுவில்,அவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டால் எனக்கு பல வித தொல்லைகளைத் தருவார்கள் என்று கூறியுள்ளார்.இதையடுத்து முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிபதி வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.


