For Quick Alerts
For Daily Alerts
Just In
நாட்டு வெடிகுண்டுடன் விளையாடிய குழந்தை பலி
தூத்துக்குடி:
நாட்டு வெடிகுண்டை வைத்து விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை, அந்த குண்டு திடீரெனவெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தது.
தூத்துக்குடி ராஜபாண்டியன் நகரைச் சேர்ந்தவர் ஆமுறுகம். இவர் மீது கொலை வழக்கு உள்பட பல வழக்குகள்உள்ளன. தனது வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை இவர் பதுக்கி வைத்திருந்தார்.
இன்று காலை அவரது இரண்டு குழந்தைகளும் நாட்டு வெடிகுண்டுகளை, விளையாட்டுப் பொருள் என்றுநினைத்து விளையாடியுள்ளனர். அப்போது இரண்டு வெடிகுண்டுகளும் வெடித்துச் சிதறின.
இதில் ஆறுமுகத்தின் ஒன்றரை வயது குழந்தை பிரபாகரன் பரிதாபமாக உடல் சிதறி இறந்தான். ஆறுமுகத்தின்மனைவி, அவரது நான்கு வயது குழந்தை ஆகியோர் படுகாயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தையடுத்து ஆறுமுகத்தை போலீஸார் கைது செய்துள்ளனர்.


