For Daily Alerts
Just In
ஊழல் புகார்: சென்னை பல்கலை. பதிவாளர் சஸ்பெண்ட்
சென்னை:
துணைவேந்தர் பதவி காலியாக இருந்தபோது, பல்கலைக்கழகத்தின் நிதியில் பெருமளவில் ஊழல் புரிந்ததாகசென்னை பல்கலைக்கழகப் பதிவாளர் என்.மணி தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி காலியாக இருந்தது.அப்போது பல்கலைக்கழகப் பதிவாளர் மணி உயர் அதிகாரிகளின் கையொப்பம் பெறாமல் பல்வேறுகோப்புகளுக்கு அனுமதி கொடுத்தார்.
மேலும் சில பணிகளை இவரே தன்னிச்சையாக அனுமதித்ததாகவும், இதில் பெருமளவில் ஊழல்நடந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.
இதைத் தொடர்ந்து மணி இப்போது தாற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழக இணைவேந்தரும், கல்வி அமைச்சருமான செம்மலை இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். மணி மீதுவிசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

