For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிராக்டர் மீது கொல்லம்-மதுரை எக்ஸ்பிரஸ் மோதல்: ரயில் டிரைவர் பலி- தடம்புரண்டு 50 பயணிகள் படுகாயம்

By Staff
Google Oneindia Tamil News

திருநெல்வேலி:

தண்டவாளத்தைக் கடந்த டிராக்டர் மீது கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் ரயில் என்ஜின் தீப்பிடித்துக்கொண்டது. இதில் ரயிலின் உதவி டிரைவர் உடல் கருகி பலியானார். டிரைவர் காயங்களுடன் தப்பினார்.

Scene at the accident place

டிராக்டருடன் மோதி விபத்துக்குளான கொல்லம்- மதுரை எக்ஸ்பிரஸ் ரயில்(படம் நன்றி- தினகரன்)
இந்த விபத்தால் ரயிலின் 3 பெட்டிகள் தடம்புரண்டன. இதனால் சுமார் 50 பயணிகள் படுகாயமடைந்தனர்.

அவர்கள் நெல்லை மற்றும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவு 1.15 மணிக்கு இந்த விபத்து நடந்தது.

கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து மதுரை வரும்எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றும் வழக்கம் போல் மதுரைக்குக் கிளம்பியது.

நள்ளிரவில் நெல்லை அருகே உள்ள செங்குளத்தை அடுத்த உள்ள முனீர் பள்ளம் என்ற இடத்தில் ரயில்வந்தபோது ரயில்வே கிராசிங்கில் ஒரு டிராக்டர் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தது. அந்த டிராக்டரின்டிரைலரில் பெரிய இயந்திரங்களும் ரசாயனமும் ஏற்றப்பட்டிருந்தன. தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது பாதிவழியில் டிராக்டர் நின்று போனதாகத் தெரிகிறது.

டிராக்டரை மீண்டும் ஸ்டார்ட் செய்ய அதன் டிரைவர் முயன்று கொண்டிருந்தபோது ரயில் நேரம் நெருங்கியது.ஆனால், டிராக்டர் தொடர்ந்து தண்டவாளத்திலேயே நின்று கொண்டிருந்தது. இதையடுத்து அந்த லெவல்கிராசிங்கின் கேட் கீப்பர் ரயில் வரும் திசையை நோக்கி ஓடினார்.

ரயிலை நிறுத்த எச்சரிக்கையும் செய்தார். ஆனால், ரயில் படு வேகத்தில் வந்ததால் அதை நிறுத்த முடியவில்லை.

ரயில் நிற்காமல் தொடர்ந்து வருவதைப் பார்த்த டிராக்டரின் டிரைவர் அதை விட்டு இறங்கி ஓடியுள்ளார். இதனால்அவர் உயிர் தப்பினார்.

அவர் ஓடிய சில நொடிகளில் டிராக்டர் மீது ரயில் பயங்கரமாக மோதியது. இதில் டிராக்டர் தூக்கி வீசப்பட்டுதூள்தூளானது. அதில், ரசாயன திரவம் இருந்ததால் மோதிய வேகத்தில் ரயில் என்ஜினில் தீப்பிடித்துக் கொண்டது.மூன்று பெட்டிகளும் தண்டவாளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டன.

பயங்கர வேகத்தில் ரயில் சென்று கொண்டிருந்ததால், என்ஜின் முழுவதும் தீ வேகமாகப் பரவியது. சிறிது நேரத்தில்என்ஜினே கருகியது. இதில் ரயிலின் ஓட்டுனர் சந்தோஷ் வர்கீஸ் தீயில் கருகி பரிதாபமாக இறந்தார். டிரைவர்ராஜூ காயங்களுடன் தப்பிவிட்டார்.

தடம்புரண்ட 3 பெட்டிகளில் இருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் 50 பயணிகள் படுகாயமடைந்தனர். ரயிலின் டிரைவரும் உதவி கார்ட் ஜீவரத்தினமும் துரிதமாக செயல்பட்டுஎன்ஜினில் பிடித்த தீ மற்ற பெட்டிகளுக்கும் பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டுபயணிகள் பெரும் உயிர்ச் சேதமும் தடுக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த பயணிகள் நெல்லை மற்றும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் 18 பேர் மட்டும் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள்சிகிச்சை பெற்று திரும்பிவிட்டனர்.

மருத்துவமனையில் உள்ளோர் விவரம்:

1.ராஜூ (ரயிலின் டிரைவர்)

2. ஜீவரத்தினம் (உதவி கார்ட்)

3. வசந்தா (திருவனந்தபுரம்)

4. சங்கரநாராயணன் (மதுரை)

5. சையத் ஹூசேன் (தென் சூரக்குடி, கன்னியாகுமரி)

6. சாகுல் ஹமீத் (தென் சூரக்குடி, கன்னியாகுமரி)

7. காதர் (தென் சூரக்குடி, கன்னியாகுமரி)

8. மாணிக்கராஜ் (முத்துக்குமாரபுரம், மதுரை)

9. கோலப்பன் (முள்ளுவிளை, கன்னியாகுமரி)

10. சைலஜா (திருவனந்தபுரம்)

11. ஜெயராஜ் (சுசீந்திரம்)

12. கதிரேசன் (சோலை நகர், பாண்டிச்சேரி)

13. சுமித்ராஜ் (கன்னியாகுமரி)

14. மனோன்மணி (சுசீந்திரம்)

15. காஜா மொய்தீன் (மணிவேலுக்குடி, புதுக்கோட்டை)

16. ராஜிவ் (திருவனந்தபுரம்)

17. ஏ.எஸ். மனோகரன் (மணவாளக்குறிச்சி)

18. விஜயன் (பொன்னன்குளிவிளை, கன்னியாகுமரி)

ரயில் போக்குவரத்து பாதிப்பு:

இந்த கோர விபத்து காரணமாக நாகர்கோவில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து முழுமையாகபாதிக்கப்பட்டுள்ளது.

அனந்தபுரி எக்ஸ்பிரஸ், கோவை-குமரி எக்ஸ்பிரஸ் ஆகியவை மதுரையிலேயே நிறுத்தப்பட்டன. சென்னை-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் விருதுநகரில் நிறுத்தப்பட்டன.

ஹவுரா- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் கொடை ரோட்டிலும், குருவாயூர்- சென்னை எக்ஸ்பிரஸ்திருவனந்தபுரத்திலும் நிறுத்தப்பட்டன.

இன்று காலை 6.10 மணிக்குப் புறப்பட்டிருக்க வேண்டிய நாகர்கோவில்- மும்பை எக்ஸ்பிரஸ் பகல் 12 மணிக்குப்புறப்பட்டுச் சென்றது.

சம்பவம் குறித்து அறிந்தவுடன் இரவோடு இரவாக நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் சுனில் பாலிவால்உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினர். உடனடியாக பஸ்கள்,கார்கள் தயார் செய்யப்பட்டு பயணிகள் திருநெல்வேலிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின்னர் இன்னொரு மார்க்கத்தில் சிறப்பு ரயில் மூலம் மதுரைக்கு அழைத்து வரப்பட்டனர்.

சம்பவம் குறித்து அறிந்த ரயில்வேத்துறை இணையமைச்சர் ஏ.கே. மூர்த்தியும் டெல்லியில் இருந்து சம்பவஇடத்துக்கு வந்து கொண்டிருப்பதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

முதலில் டேங்கர் லாரியின் மீது ரயில் மோதியதாக தகவல்கள் வந்தன. அது டிராக்டர் என தென்னக ரயில்வேவிளக்கம் தந்துள்ளது.

காயமடைந்து திருநெல்வேலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளவர்களை தமிழக வனத்துறை அமைச்சர்வைத்தியலிங்கம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X