For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பண்ணையார் எண்கெளன்டர் கொலை: சிபிஐ விசாராணை கோரி கலாமிடம் நாடார்கள் மனு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல பணக்காரரும் நாடார் சமூகத்தினரின் மிக முக்கிய பிரமுகருமானவெங்கடேச பண்ணையார் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டசம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தக்கோரி ஜனாதிபதி நாடார் அமைப்புகள் கோரிக்கை மனு கொடுத்தன.

ராஜிவ் காந்தி நினைவிடத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்க தமிழகம் வந்த அப்துல் கலாமை முன்னாள் மத்தியஅமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் பல்வேறு நாடார் அமைப்புகளின் பிரதிநிதிகள் சந்தித்தனர்.

அவரிடம் ஒரு மனுவையும் கொடுத்தனர்.

அதில் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ரெளடிகளின் அட்டகாசத்தை ஒடுக்கிய வெங்கடேச பண்ணையாரை,சென்னை போலீஸார் பொய்யான வழக்கைப் போட்டு திட்டமிட்டு கொலை செய்து விட்டனர்.

விசாரணைக்காக சென்றபோது பண்ணையார் தங்களைத் தாக்க முயன்றதாகவும், சுய பாதுகாப்புக்காகவே அவரைசுட்டுக் கொன்றதாகவும் போலீஸ் தரப்பு கூறுகிறது. ஆனால், பண்ணையார் கையில் ஆயுதம் எதுவும்வைத்திருந்திருக்கவில்லை. மேலும் அவர் தாக்கி இருந்தால் போலீஸ் தரப்பில் யாரேனும் பலியாகியிருக்கவேண்டும்.

கதவை உடைத்து பண்ணையார் வீட்டுக்குள் சென்றதாக போலீஸ் கூறுகிறது. ஆனால் அப்படி எதுவும்நடக்கவில்லை. பண்ணையாரை சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன்தான் போலீஸார்சென்றுள்ளனர்.

Venkatesa Pannaiyarஇதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த குடியரசுத் தலைவர் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் நாடார்சங்கங்களின் பிரதிநிதிகள் கோரியுள்ளனர்.

இதற்கிடையே வெங்கடேச பண்ணையாரை எண்கெளன்டரில் போட்டுத் தள்ள சசிகலா தான் போவீசாருக்குஉத்தரவிட்டதாக தன்னைச் சந்திக்க வரும் நாடார் இன பிரமுகர்களிடம் அதே இனத்தைச் சேர்ந்த அமைச்சர்அனிதா ராதாகிருஷ்ணன் கூறுவதாகவும் செய்திகள் வருகின்றன.

சென்னையில் இயங்கி வரும் மலையாளிகளுக்குச் சொந்தமான ஒரு நிதி நிறுவனத்திடம் ரூ. 1 கோடி கொடுக்கல்,வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் தான் வெங்கடேச பண்ணையாரை போலீசார் போட்டுத் தள்ளியதாகக்கூறப்படுகிறது.

அந்த நிறுவனம் முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவியின் (இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்) உறவினர்களுக்குச்சொந்தமானது என்றும், அந்த நிறுவனத்திடம் தகராறில் ஈடுபட்டதால் தான் பண்ணையாரை கொல்லகாவல்துறையின் உதவியை பீவி நாடியதாகவும் நக்கீரன் வார இதழ் கூறுகிறது. தமிழக டிஜிபி கோவிந்த், சென்னைகமிஷ்னர் விஜய்குமார் ஆகியோரும் மலையாளிகளே என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே தென் மாவட்டங்களில் பண்ணையாரின் கொலையை அடுத்து நாடார் சமூகத்தினர் மத்தியில்அரசின் மீதும் போலீசாரின் மீதும் கடும் அதிருப்தி அலை பரவி வருகிறது. இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம்கொண்டு செல்லவும் நாடார் இன முக்கியஸ்தர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக கோடிக்கணக்கில் செலவானாலும் அதை தாங்கள் வழங்குவதாக பல நாடார் சமூக வர்த்தகஅமைப்புகளும் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனைத் தொடர்ந்து அவரது சகோதரரான மாலைமுரசு அதிபர்பா.ராமச்சந்திர ஆதித்தனும் வெங்கடேச பண்ணையாரின் வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரித்துள்ளனர்.இவர்களைப் போலவே தமிழகத்தின் மிக முக்கிய நாடார் இனப் பிரமுகர்களும் தினந்தோறும் வெங்கடேசபண்ணையாரின் வீட்டில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X