For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையிலிருந்து திருச்செந்தூருக்கு .... அதிமுகவுக்கு எதிராக அணி திரளும் நாடார்கள்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திருச்செந்தூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிடும் வெங்கடேசபண்ணையாரின் மனைவி ராதிகா செல்விக்கு பிரசாரம் செய்வதற்காக சென்னையிலிருந்துஏராளமான நாடார் சமூகத்தினர் திருச்செந்தூர் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.

திருச்செந்தூரைச் சேர்ந்த நாடார் சமுதாயப் பிரமுகர் வெங்கடேச பண்ணையார் சமீபத்தில்சென்னையில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். நாடார் சமூகத்தினருக்கு பெரும்பாதுகாப்பாக (ஆள் பலம், பண பலம் மூலமாக) இருந்து வந்த பண்ணையாரை போலீஸார் சுட்டுக்கொன்றதால் நாடார் சமூகத்தினரிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

பண்ணையாரால் பலன் அடைந்த நாடார்கள் அதிமுக அரசுக்கு எதிராக திரண்டு வருகின்றனர்.அவர்கள் அனைவரது கவனம் தற்போது திருச்செந்தூர் தொகுதியின் மீது திரும்பியுள்ளது.திருச்செந்தூர் தொகுதியில், பண்ணையாரின் மனைவி ராதிகா செல்வி திமுக வேட்பாளராகபோட்டியிடுகிறார்.

பண்ணையார் கொலைக்குப் பழிவாங்கும் விதமாக ராதிகா செல்வியை பெருவாரியான வாக்குவித்தியாசத்தில் ஜெயிக்க வைக்க வேண்டும் என்று நாடார்கள் கங்கனம் கட்டியுள்ளனர். குறிப்பாகசென்னையிலிருந்து ஒரு பெரும் படையே திருச்செந்தூர் சென்று ராதிகாவின் வெற்றிக்காக தீவிரப்பிரசாரத்தில் ஈடுபடவுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை அவர்களது பெல்ட் என்று கருதப்படும் தென் மாவட்டங்களுக்குஅடுத்தபடியாக சென்னையில்தான் அதிக அளவில் நாடார்கள் வசிக்கிறார்கள். ஒரு காலத்தில்மதுரை தேவர்களின் கோட்டை என்று கருதப்பட்டது. பின்னர் அது நாடார்கள் வசம் சென்று விட்டது.அதே போலவே இப்போது சென்னையின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த சமூகமாகநாடார்கள் இருக்கிறார்கள்.

சென்னையில் உள்ள சில நாடார் அமைப்புகள் ராதிகா செல்வியின் வெற்றிக்கு தீவிரமாக பாடுபடஉறுதி எடுத்துள்ளன. என்.ஆர். தனபாலன், தா.வெள்ளையன் உள்ளிட்ட நாடார் சமூகப்பிரமுகர்கள் இதற்கான திட்டங்களை வகுத்துள்ளனர்.

கடந்த எம்.பி தேர்தலின்போது திருநெல்வேலி தொகுதியில் கடம்பூர் ஆர். ஜனார்தனம் அதிமுகவேட்பாளராகப் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் நடிகர் சரத்குமார்நிறுத்தப்பட்டார். இருவரும் நாடார்கள், சென்னை நாடார் பிரமுகர்களுக்கு இருவருமேவேண்டியவர்கள். இதனால் யாரை ஆதரிப்பது என்ற குழப்பம் நாடார்களுக்கு ஏற்பட்டது.

அந்த சூழ்நிலையில், தன்னை நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்று கூறிக் கொண்டு, குறுகியவட்டத்திற்குள் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை என்று எதேச்சையாக சரத்குமார் ஒரு கட்டத்தில்கூறி விட, ஆத்திரமடைந்தனர் நாடார் சமுதாயத்தினர்.

சரத்குமாரை சமுதாய துரோகி என்ற ரீதியில் அழைத்து, நெல்லையில் மண்ணைக் கவ்வச்செய்தனர். கடம்பூர் ஜனார்தனத்தின் வெற்றிக்கு சென்னையிலிருந்து சென்ற நாடார்களும்,அவர்களது பண பலமும் பெரும் பங்கு வகித்தது. ஆள் பலத்துடனும், பண பலத்துடனும்இங்கிருந்த சென்ற நாடார் சமுதாயத்தினர் சரத்குமாரை தோற்கடித்து விட்டுத்தான் சென்னைக்குரயிலேறினர்.

அதேபோல, தற்போதும் ராதிகா செல்விக்கு ஆதரவளித்து, அதிமுகவை வீழ்த்த அவர்கள் முடிவுசெய்துள்ளனர். திருச்செந்தூர் மட்டுமல்லாது தென் கோடி மாவட்டங்களில் அதிமுகவுக்குநாடார்களின் ஓட்டுக்கள் கிடைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் தீவிரமாக இறங்க அவர்கள்முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இதற்காக வாகனங்களையும், ஆட்களையும் திரட்டி வருகிறார்கள் அவர்கள். பணத்தையும் அள்ளிஇறைக்க அவர்கள் முடிவு செய்து ஆயத்தமாகி வருகிறார்கள். விரைவில் இந்த நாடார் படைதிருச்செந்தூருக்கு படையெடுக்கும் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X