For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகாராஷ்டிரத்தில் பெரும் ரயில் விபத்து: 20 பேர் பலி- 100 பேர் காயம்மும்பை:மகாராஷ்டிர மாநிலத்தில் ரயில் தடம்புரண்டு பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் 20 பேர் பலியாயினர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.மங்களூரில் இருந்து மும்பைக்கு கொங்கன் ரயில் பாதையில் சென்ற மத்ஸ்யகந்தா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 6 மணியளவில் ரெய்காட் மாவட்டம் ரோகா அருகே ரயில் பாலத்தில் கிடந்த பாறைகளில் மோதியது.அப்போது ரயில் படு வேகதத்தில் சென்று கொண்டிருந்ததால், உடனடியாகத் தடம் புரண்டது. ரயிலின் என்ஜின் பாலத்தில் இருந்து உருண்டு ஆற்றில் விழுந்தது.இரண்டு பெட்டிகள் பாலத்தில் அபாயகரமாகத் தொங்கின. இந்த இரு பெட்டிகளிலும் இருந்த 20 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 7 பெட்டிகள் பாலத்திலேயே தண்டவாளத்தை விட்டு இறங்கின.தொங்கிக் கொண்டிருக்கும் பெட்டிகளில் இருந்து 100 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 60 பேர் மகாத் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.கடும் மழை காரணமாக அருகில் உள்ள மலைகளில் இருந்து பாறைகள் உருண்டு தண்டவாளத்தில் விழுந்துள்ளன. ஆற்றுக்குள் விழுந்த ரயில் என்ஜினில் இருந்த டிரைவர், துணை டிரைவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.இந்த விபத்து குறித்து அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த ரயில்வேத்துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 5,000 முதல் ரூ. 15,000 வரையும் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.மேலும் விபத்து குறித்து மேற்கு மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் விசாரணைக்கும் உத்தரவிட்டார்.விபத்து, பயணிகள் குறித்து விவரம் அறிய 0832-2703950 என்ற ஹெல்ப்லைன் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.விபத்தில் சிக்கிய பயணிகளை அழைத்து வர சிறப்பு ரயில் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ வசதிகள் கொண்ட ரயிலும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது. 10ம் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலம் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.கொங்கன் ரயில்வே பாதையில் நடக்கும் இரண்டாவது பெரிய விபத்து இது. மழை காரணமாக கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பாறைகள் உருண்டு தண்டவாளத்தில் விழுந்தன. அப்போதும் பாறைகளில் ரயில் மோதி 53 பேர் பலியாயினர்.ரயில்கள் பாதை மாற்றம்:இன்றைய விபத்தையடுத்து கொங்கன் ரயில் பாதையில் செல்லும் பல்வேறு ரயில்களும் வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.

By Staff
Google Oneindia Tamil News

மும்பை:

மகாராஷ்டிர மாநிலத்தில் ரயில் தடம்புரண்டு பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் 20 பேர் பலியாயினர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

மங்களூரில் இருந்து மும்பைக்கு கொங்கன் ரயில் பாதையில் சென்ற மத்ஸ்யகந்தா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 6 மணியளவில் ரெய்காட் மாவட்டம் ரோகா அருகே ரயில் பாலத்தில் கிடந்த பாறைகளில் மோதியது.

அப்போது ரயில் படு வேகதத்தில் சென்று கொண்டிருந்ததால், உடனடியாகத் தடம் புரண்டது. ரயிலின் என்ஜின் பாலத்தில் இருந்து உருண்டு ஆற்றில் விழுந்தது.

இரண்டு பெட்டிகள் பாலத்தில் அபாயகரமாகத் தொங்கின. இந்த இரு பெட்டிகளிலும் இருந்த 20 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 7 பெட்டிகள் பாலத்திலேயே தண்டவாளத்தை விட்டு இறங்கின.

தொங்கிக் கொண்டிருக்கும் பெட்டிகளில் இருந்து 100 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 60 பேர் மகாத் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடும் மழை காரணமாக அருகில் உள்ள மலைகளில் இருந்து பாறைகள் உருண்டு தண்டவாளத்தில் விழுந்துள்ளன. ஆற்றுக்குள் விழுந்த ரயில் என்ஜினில் இருந்த டிரைவர், துணை டிரைவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

இந்த விபத்து குறித்து அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த ரயில்வேத்துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 5,000 முதல் ரூ. 15,000 வரையும் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

மேலும் விபத்து குறித்து மேற்கு மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் விசாரணைக்கும் உத்தரவிட்டார்.

விபத்து, பயணிகள் குறித்து விவரம் அறிய 0832-2703950 என்ற ஹெல்ப்லைன் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

விபத்தில் சிக்கிய பயணிகளை அழைத்து வர சிறப்பு ரயில் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ வசதிகள் கொண்ட ரயிலும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது. 10ம் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலம் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

கொங்கன் ரயில்வே பாதையில் நடக்கும் இரண்டாவது பெரிய விபத்து இது. மழை காரணமாக கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பாறைகள் உருண்டு தண்டவாளத்தில் விழுந்தன. அப்போதும் பாறைகளில் ரயில் மோதி 53 பேர் பலியாயினர்.ரயில்கள் பாதை மாற்றம்:

இன்றைய விபத்தையடுத்து கொங்கன் ரயில் பாதையில் செல்லும் பல்வேறு ரயில்களும் வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X