• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராகுல் காந்தி வருகை: திமுக ரூ. 25 லட்சம் உதவி

By Staff
|

டெல்லி:

பள்ளித் தீ விபத்தில் பலியான குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்த காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மகனும் எம்பியுமான ராகுல் காந்தி இன்று கும்பகோணம் சென்றார்.

காலை சென்னை வந்த அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கும்பகோணம் சென்றார். அவருடன்பெட்ரோலியத்துறை அமைச்சர் மணிசங்கர அய்யரும் சென்றார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை சந்தித்த அவர், இறந்த குழந்தைகளின்பெற்றோர் சலரையும் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது ராகுல் கண் கலங்கினார். விபத்து நடந்தபள்ளியையும் அவர் பார்வையிட்டார்.

நாளை சோனியா காந்தியும் கும்பகோணம் வருவார் என்று தெரிகிறது.

பெட்ரோலியத்துறை மருத்துவ குழுக்கள்:

இதற்கிடையே தீக் காய மருத்துவ உதவி சாதனங்கள், மருந்துகளுடன் கும்பகோணம் விரையுமாறு பெட்ரோலியத்துறையின்மருத்துவப் பிரிவுக்கு அந்தத் துறையின் அமைச்சர் மணிசங்கர அய்யர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அய்யரின் மயிலாடுதுறை தொகுதியின் கீழ் தான் கும்பகோணம் நகர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிகளில் பாதுகாப்பு: தயாநிதி

இதற்கிடையே கும்பகோணத்தில் இருந்து சென்னை திரும்பிய மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் நிருபர்களிடம்பேசுகையில்,

இனி இதுபோன்ற ஒரு சம்பவம் நாட்டின் எந்தப் பகுதியிலும் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; அனைத்துப்பள்ளிகளிலும் அடிப்படை பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த அனைத்து மாநில முதல்வர்களுக்கும் உத்தரவிட வேண்டும் என்றுபிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன்.

தீ பரவிய சுமார் ஒரு மணி நேரத்திற்குள் 65 குழந்தைகள் மாண்டு விட்டனர். 60 முதல் 70 சதவீத உடல் தீயில் கருகிய நிலையில் 4குழந்தைகள் மருத்துவமனையில் உள்ளனர். அவர்கள் உயிர் பிழைக்கும் வாய்ப்புகள் குறைவாக உள்ளன.

நேற்றிரவு மயானத்தில் போதிய விளக்குகள் இன்றியும், குழிகள் வெட்ட ஆட்கள் இன்றியும் பெற்றோர்கள்அவதிப்பட்டதாக அறிந்தேன். இந்தச் சம்பவம் குறித்து முழுமையான அறிக்கையை பிரதமரிடம் சமர்பிப்பேன் என்றார்.

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் குளிர்சாதன வசதியும், காற்றாடிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது. தீக்காயத்தால் குழந்தைகள் வலி, எரிச்சலால் அலறியதையடுத்து மருத்துவமனைக்கு பேன்களையும் வரவழைத்துத் தந்தார் தயாநிதி.

திமுக சார்பில் ரூ. 25 லட்சம் நிதி:

இதற்கிடையே, தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு நிதியுதவி செய்ய திமுக அறக்கட்டளை சார்பில் ரூ. 25 லட்சம்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அக் கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கும்பகோணம் தொகுதி எம்.எல்.ஏவுமான கோ.சி.மணி தலைமையில் 6 பேர்கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு மூலம் பாதிக்கப்பட்டோருக்கு நிதியுதவி தரப்படும்.

2001ம் ஆண்டிலிருந்து இதுவரை பல தீவிபத்துக்கள் தமிழகத்தில் நடந்துள்ளன. கடைசியாக ஸ்ரீரங்கத்தில் கொடூர தீ விபத்து நடந்து 60பேர் பலியானார்கள். அதற்குப் பிறகும் கட்டடங்களின் பாதுகாப்பு குறித்து ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல்விட்டதால்தான் இந்த கொடூர விபத்து நடந்து விட்டது என்றார்.

டாக்டர்களுக்கு அன்புமணி உத்தரவு:

இதற்கிடையே தீக்காயமடைந்த கும்பகோணம் குழந்தைகளுக்கு நவீன சிகிச்சைகள் அளிக்க தமிழகம்விரையத் தயாராக இருக்குமாறு டெல்லியின் மிகப் பெரிய மருத்துவமனையான சப்தர்சங்மருத்துவமனையின் தீக் காயம் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சைப் பிரிவுக்கு மத்திய நலத்துறைஅமைச்சர் அன்புமணி ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.

இந்தக் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்என்று அவர் கூறியுள்ளார்.

அதே போல பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இருந்தும் ஒரு குழுவை கும்பகோணத்துக்குஅன்புமணி அனுப்பி வைத்துள்ளார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X