For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனி, ஜெ. ஹைதராபாத் போக மாட்டார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கும்பகோணத்தில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து மத்திய அரசின் சார்பில் ரூ. 1 கோடி நிதியுதவியைகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவித்தது, பிரதமரின் அதிகாரத்தில் நேரடியாகத்தலையிடுவதற்கு சமமாகும் என முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர்,

கும்பகோணம் தீ விபத்தையடுத்து சோனியா காந்தி மத்திய அரசின் சார்பில் ரூ. 1 கோடிநிதியுதவியை அறிவிக்கிறார். பிரதமரோ அல்லது அதிகாரியோ தான் இதனை அறிவிக்கலாம்.அரசாங்கத்தில் எந்தப் பதவியிலும் வகிக்காத சோனியா எப்படி இதை அறிவிக்கலாம். இதன்மூலம்பிரதமரின் அதிகாரத்தையே குறைக்க முயன்றுள்ளார் சோனியா.

முழு விசாரணை நடக்கும்:

இந்த விபத்து தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி நிர்வாகிகள் உள்பட 17 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தவறு செய்தவர்களை இந்த அரசு தண்டிக்காமல் விடாது. மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட சம்பத் கமிஷன் தனது விசாரணையை இன்னும்ஆரம்பிக்கவில்லை. விபத்தின் அனைத்து விஷயங்களையும் இந்தக் கமிஷன் ஆராயும். தீ விபத்துஏற்பட்டவுடன் ஆசிரியர்கள் தப்பியோடியதாகச் சொல்லப்படுவது குறித்தும் தீர விசாரிக்கப்படும்.

ஸ்ரீரங்கம் திருமண மண்டபத்தில் நடந்த தீ விபத்தையும், பள்ளியில் நடந்த இந்த விபத்தையும்ஒப்பிட்டுப் பேசுவது சரியல்ல.

நாட்டுக்கே கேவலம்:

கொலை வழக்கில் மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் சிபு சோரேனைக் கைது செய்ய நீதிமன்றம்உத்தரவிட்டிருக்கிறது. ஒரு கொலைக் குற்றவாளி அமைச்சராக்கப்பட்டது நாட்டுக்கே அவமானம்.

இப்போது அவர் தலைமறைவாகியிருக்கிறார். அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்என்கிறார்கள். அதை பிரதமர் அலுவலகம் மறுக்கிறது. மத்திய அமைச்சரவே தலைமறைவான,இப்படிப்பட்ட கேவலமான சூழல் சுதந்திர இந்தியாவில் இதுவரை ஏற்பட்டதில்லை.

இதற்கு பிரதமர் மன்மோகன் சிங்கை நான் குறை சொல்ல மாட்டேன். அமைச்சர்களை தேர்வுசெய்தது சோனியா காந்தி தான். அவர் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். இந்த விவகாரத்தில்பாஜக கூட்டணியின் போராட்டத்தை அதிமுக ஆதரிக்கிறது.

அமெரிக்காவுக்கு கண்டனம்:

கடந்த ஆட்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் அமெரிக்காவில்அதிகாரிகளால் சோதனையிடப்பட்டது நாட்டுக்கே ஏற்பட்ட அவமானம். அதை ஏன்பெர்னாண்டஸ் வெளியில் சொல்லாமல் மறைத்தார் என்று தெரியவில்லை.

அப்போதே அமெரிக்காவுக்கு நமது மிகக் கடுமையான கண்டனத்தை நாம் தெரிவித்திருக்கவேண்டும்.

மின்னணு வாக்கு பதிவு எந்திரங்களுக்கு எதிர்ப்பு:

நாட்டில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் மூலம் தேர்தல் நடத்துவதை உடனே நிறுத்தவேண்டும்.

அந்த எந்திரங்களில் பயன்படுத்தப்படும் மைக்ரோ-சிப்பில் முறைகேடுகள் செய்யலாம் என்றுதெரியவந்ததால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளே, மீண்டும் பழைய முறைப்படி வாக்குப்பதிவை (வாக்குச் சீட்டில் முத்திரை குத்தும்) நடத்த ஆரம்பித்துவிட்டன.

நாம் என்ன அவர்களை விட மிக முன்னேறிய நாடா?. இதனால் பழைய முறைப்படி வாக்குப் பதிவுநடத்த தேர்தல் கமிஷன் முன் வர வேண்டும்.

கடந்த மக்களவைத் தேர்தலில் வாக்காளர் நீக்கம், தேர்தல் முறைகேடுகளால் எதிர்க் கட்சிகளுக்குவெற்றி கிடைத்துவிட்டது. ஆனாலும், மக்களின் முடிவை ஏற்கிறேன் என்றார்.

2001ம் ஆண்டில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் தேர்தல் நடந்தபோது அதிமுக வென்றதேஎன்று நிருபர்கள் கேட்டபோது, அப்போது அதிமுக வெல்லாது என திமுக கூட்டணி நினைத்தது.இதனால் முறைகேடுகளில் ஈடுபடவில்லை. அதனால் வெற்றி கிடைத்தது என்றார்.

கருணாநிதி மீது தாக்கு:

மேலும் அவர் கூறுகையில், சட்டமன்றக் கூட்டத் தொடர் ஒரு வாரம் தான் நடக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார் கருணாநிதி. சட்டசபைக்கே வராத அவருக்கு இந்தக் கேள்வி கேட்க என்ன அருகதைஇருக்கிறது?

தேர்தலை முன் கூட்டியே நடத்த சட்டமன்றத்தைக் கலைப்பேன் என்றெல்லாம் கூறப்படுவது தவறானசெய்தி.

மேட்டூர் அணையில் தற்போது 36 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. இது குறுவைப் பயிருக்குபோதுமானதல்ல.

அணையை ஒரு முறை திறந்தால், குறுவைப் பயிர் முழுமைக்கும் அது பயன்படுவதாக இருக்க வேண்டும். ஆனால்அந்த நிலை தற்போது இல்லை. இதனால் இப்போதைக்கு அணையைத் திறக்க முடியாது.

இனி ஹைதராபாத் பயணமில்லை:

நக்ஸலைட்டுகள் மீதான தடையை ஆந்திர அரசு நீக்கியிருப்பது மிக அபாயகரமானது, பொறுப்பிலாத செயல். இதனால் நக்ஸல்தீவிரவாதிகள் தர்மபுரி உள்ளிட்ட தமிழக பகுதிகளுக்குள் ஊடுருவும் அபாயம் அதிகரித்துள்ளது.

சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டிய ஒரு மாநில அரசு இவ்வளவு பொறுப்பில்லாத ஒரு செயலை எப்படி செய்தது என்று புரியவில்லை.மக்களின் உயிரோடு ஆந்திர அரசு விளையாடிக் கொண்டிருக்கிறது.

இனி ஆந்திராவுக்குப் போக வேண்டாம் என்று எனக்கு என் நண்பர்கள் எச்சரித்துள்ளனர். வருடத்துக்கு ஒரு முறை ஹைதராபாத்செல்வது எனது வழக்கம். அதை இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். இது எனக்கு தனிப்பட்ட முறையில் ஏற்பட்டஇழப்பாகும்.

மேலும் முஸ்லீம்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கூடு வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.முஸ்லீம்கள் மட்டுமே சிறுபான்மையினர் அல்ல. கிருஸ்தவர்களும் இட ஒதுக்கீடு கேட்டால் என்ன செய்யப் போகிறது ஆந்திரஅரசு.

அரசியல் சட்டம் சிறுபான்மையினருக்கு சில சலுகைகளை வழங்கியுள்ளது. அது பெரும்பான்மையினருக்குக் கிடைக்கவில்லை என்றார்ஜெயலலிதா.

மேட்டூர் அணையில் தற்போது 36 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. இது குறுவைப் பயிருக்குபோதுமானதல்ல.

அணையை ஒரு முறை திறந்தால், குறுவைப் பயிர் முழுமைக்கும் அது பயன்படுவதாக இருக்க வேண்டும். ஆனால்அந்த நிலை தற்போது இல்லை. இதனால் இப்போதைக்கு அணையைத் திறக்க முடியாது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X