For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை பாதுகாப்பு படைகளுக்கு இந்தியா உதவி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

இலங்கை பாதுகாப்புப் படைகளுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா முன் வந்துள்ளது.

நான்கு நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள அருண் பிரகாஷ், அந் நாட்டு அதிபர் சந்திரிகா குமாரதுங்காவைநேற்று சந்தித்தார். இன்று திருகோணமலையில் உள்ள இலங்கை கடறபடைத் தளத்தையும் பார்வையிடுகிறார்.

இலங்கையின் பாதுகாப்பைக் காரணம் காட்டி அந் நாட்டுடனான ராணுவ உறவை வலுப்படுத்தும் முயற்சிகளில்பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தானின் இந்த முயற்சியை முறியடிக்க இலங்கைக்கு ராணுவ உதவிகள் செய்யஇந்தியா தீவிர ஆர்வம் காட்டி வருகிறது.

இலங்கை பாதுகாப்புப் படைகளுக்கு இந்தியா பயிற்சி அளிப்பதோடு, ஆயுதங்களையும் வழங்கத் தயாராகஉள்ளது. மேலும் பாக் ஜலசந்தியை இலங்கை கடற்படையுடன் இணைந்து கண்காணிக்கவும் இந்திய கடற்படைமுன் வந்துள்ளது.

இந்த விஷயங்கள் குறித்து சந்திரிகா மற்றும் அதிகாரிகளுடன் அருண் பிரகாஷ் விவாதித்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போதைய இந்திய கடற்படைத் தளபதி மானவேந்திர சிங் இலங்கைக்குபயணம் மேற்கொள்ள இருந்தார். அதே நேரத்தில் பாகிஸ்தானிய ஜெனரல் முகம்மத் அஜிஸ் கான் இலங்கையில்இருந்தார். (கார்கில் போரை நடத்தியதில் முக்கிய அதிகாரிகளில் ஒருவர் கான்).

ஆனால், அவர் அங்கிருப்பதை இந்தியாவிடம் இலங்கை அரசு மறைத்தது. இதையடுத்து மானவேந்திர சிங்கின்பயணத்தை இந்தியா ரத்துசெய்தது. இதன் பிறகு இப்போது தான் இந்திய கடற்படைத் தளபதி இலங்கை செல்கிறார்.

திருகோணமலை கடற்படை தளத்தில் இந்தியன் ஆயில் கார்ப்ரேசனின் 100 கச்சா எண்ணெய் கிடங்குகள் இருப்பதுகுறிப்பிடத்தக்கது. வளைகுடாவில் இருந்து கப்பல்களில் வரும் எண்ணெய் இந்தியாவால் இலங்கையிலும் சேமித்துவைக்கப்படுகிறது.

Strategic oil reserve என்ற வகையில் ராணுவ காரணங்களுக்காக இந்த எண்ணெய் கிடங்குகளை இந்தியாபராமரித்து வருகிறது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X