For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கட்டாய ஓய்வை எதிர்த்து வனச் சரகர் வழக்கு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக அரசால் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்ட பெரியகுளம் சரக வனச்சரகர் ராஜேந்திரன் அரசு உத்தரவைஎதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

பெரியகுளம் வனச்சரகராக இருந்தவர் ராஜேந்திரன். கொடைக்கானல் மலையில் மரங்கள் வெட்டப்படுவதுதொடர்பாக இவர் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா மீது பகிரங்கமாக புகார்தெரிவித்தார்.

மேலும், மரங்களை வெட்டி கடத்தும் ராஜாவைக் கைது செய்யாமல் விட மாட்டேன் என்றும் பகிரங்கமாகஅறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந் நிலையில் ராஜேந்திரன் மீது தீண்டாமைக் கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில் இவர் கைதும் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.ஆனால், இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தை அணுகி பணிநீக்க உத்தரவை ரத்து செய்து மீண்டும் பணியில்சேர்ந்தார் ராஜேந்திரன். ஆனால் சில நாட்களிலேயே அவருக்கு கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பியதுதமிழக அரசு.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார் ராஜேந்திரன். தனது மனுவில், 2004,செப்டம்பர் 11ம் தேதியிட்ட கட்டாய ஓய்வு உத்தரவு விதிமுறைகளை மீறிய செயலாகும். தமிழக அரசின்சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை வெளியிட்ட இந்த உத்தரவு முறையான உத்தரவல்ல.

விதிமுறைகளை, மரபுகளை மனதில் கொள்ளாமல் அவசர கோலத்தில் எடுக்கப்பட்ட முடிவு இது. என் மீதானபழிவாங்கும் உணர்ச்சியுடன் இந்த கட்டாய ஓய்வு உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி தற்காலிக பணி நீக்க உத்தரவை திண்டுக்கல் வட்ட வனத்துறை பாதுகாவலர்வழங்கினார். இதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தேன். இதைத் தொடர்ந்து 31ம்தேதி பணிநீக்க உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இருப்பினும் செப்டம்பர் 12ம் தேதி எனது வீட்டிற்கு வந்த அதிகாரிகள், இரண்டு உத்தரவுகளை எனது வீட்டின்கதவில் ஒட்டிச் சென்றனர். ஒரு உத்தரவில் பணி நீக்க உத்தரவை வாபஸ் பெறுவதற்கான வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இன்னொரு உத்தரவு, என்னைப் பணியிலிருந்து கட்டாய ஓய்வு அளித்திருப்பதற்கானஉத்தரவாகும்.

எனது தற்காலிக பணி நீக்க உத்தரவு தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நிலுவையில்இருக்கும்போது கட்டாய ஓய்வு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது செல்லாது என்று தனது மனுவில் அவர்கூறியிருந்தார்.

மனுவை பரிசீலித்த நீதிபதி முருகேசன் அக்டோபர் 6ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X