For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வன அதிகாரி நீக்கம் ஏன்?: அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தேனி மாவட்டம் பெரியகுளம் வனச்சரகர் ராஜேந்திரனுக்கு கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டதற்கான சரியானகாரணங்களை தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா, தேனி மாவட்ட காட்டுப் பகுதியில் இருந்துதேக்கு மரங்களை சட்ட விரோதமாக வெட்டி கேரளாவுக்குக் கடத்தி வருவதாக வனச் சரகர் ராஜேந்திரன் குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரத்தில் ராஜா மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யவும் முயன்றார்.

இதையடுத்து அவர் மீது தீண்டாமைக் கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் போட்டு போலீஸ் அலைகழித்தது.போலீஸ் மற்றும் அமைச்சரின் ஆட்களால் மிரட்டப்பட்ட ராஜேந்திரன் பயம்து போய் தலைமறைவானார்.

கடைசியில் நீதிமன்றத்தில் சரணடைந்து, நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்தார். இந் நிலையில் அவரை தமிழகஅரசு சஸ்பெண்ட் செய்தது. இதையடுத்து ஒ.பன்னீர்செல்வம் குறித்தும், அவரது தம்பி குறித்தும் சன் டிவிக்குத்தொடர்ந்து பேட்டிக் கொடுத்து வந்தார் ராஜேந்திரன்.

இதையடுத்து அரசுப் பணிகே முற்றிலும் லாயக்கில்லாதவர் என்று கூறி ராஜேந்திரனுக்கு தமிழக அரசு கட்டாயஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பியது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார் ராஜேந்திரன். இந்த வழக்கு இன்றுநீதிபதி முருகேசன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேந்திரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,

முக்கியப் புள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதன் எதிரொலியாகவே ராஜேந்திரன் மீது அரசியல்காழ்ப்புணர்ச்சியுடன் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறினார்.

இதை மறுத்த அரசு வழக்கறிஞர், ராஜேந்திரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களும், வழக்குகளும் இருந்தகாரணத்தினால்தான் அவருக்குக் கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டது என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முருகேசன், ராஜேந்திரனுக்கு கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டதற்கானசரியான காரணங்களை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். பொத்தாம் பொதுவான ஏதாவது காரணத்தைச்சொல்லக் கூடாது.

இதற்கு 13ம் தேதி வரை அரசுக்கு கால அவகாசம் அளிக்கிறேன். அதற்குள் சரியான காரணங்களையும்,அதுதொடர்பான ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ராஜேந்திரனைத் தேடி வந்ததாகக் கூறி இரவு, பகல் என்று பார்க்காமல் அவரது வீட்டுக்குள் நுழைந்து தனியேஇருந்த அவரது மனைவியை போலீசார் மிரட்டியது நினைவுகூறத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X