For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலட்சுமி: வசமாய் சிக்கினார் இளங்கோவன்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

Sivaji and Team

கனரா வங்கியில் விசாரணை நடத்திவிட்டுத் திரும்பும் சிபிஐ கூடுதல் எஸ்.பி. சிவாஜி அண்ட் டீம்
ஜெயலட்சுமியின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்த சிபிஐ அதிகாரிகளிடம் வசமாக சிக்கியுள்ளார் இன்ஸ்பெக்டர்இளங்கோவன்.

ஜெயலட்சுமியை தனது மனைவி என்று குறிப்பிட்டு, தனது போலீஸ் குடியிருப்பின் முகவரியைக் கொடுத்து, இந்தவங்கிக் கணக்கை தொடங்கிக் கொடுத்ததே இளங்கோவன் தான் என்பது சிபிஐ விசாரணையில் உறுதியாகியுள்ளது.

ஜெயலட்சுமியை சும்மா பாத்துருக்கேன்.. வேற ஒண்ணுமே தெரியாது என்று புருடா விட்டவர் தான் இந்தஇளங்கோவன்.

ஆனால், தன்னுடன் குடும்பமே நடத்திய இளங்கோவன், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு காலில்விழுந்து கெஞ்சினார். எனக்காக இன்ஸ்பெக்டர் மலைச்சாமியுடன் போலீஸ் யூனிபார்மில் அடித்து உருண்டார்என்று தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார் ஜெயலட்சுமி.

இந் நிலையில் சிபிஐ கூடுதல் எஸ்.பி. சிவாஜி தலைமையிலான குழு, ஜெயலட்சுமி கணக்கு வைத்துள்ள கனராவங்கியில் ஆய்வு செய்தபோது ஜெயலட்சுமியை தனது மனைவி என்று இளங்கோவன் குறிப்பிட்டிருப்பது தெரியவந்தது.

ஜெயலட்சுமி பேட்டி:

Jayalakshmi வங்கிகளில் சிபிஐ சோதனை நடத்தியது குறித்து நிருபரிடம் ஜெயலட்சுமி கூறுகையில்,

கடந்த டிசம்பர் மாதம் 13 அல்லது 14ம் தேதி கனரா வங்கியில் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் எனக்கு கணக்குதொடங்கி கொடுத்தார். அதற்கான விண்ணப்ப படிவத்தை ஏட்டு கண்ணன் பூர்த்தி செய்தார். அதில் நான்கையெழுத்து போட்டேன்.

பின்னர் என்னிடம் 60 பிளாங்க் செக் சிலிப்புகளில் கையெழுத்தையும் வாங்கிக் கொண்ட, இளங்கோவன் அதைதன் வசமே வைத்துக் கொண்டார். தனது லஞ்சப் பணத்தை பதுக்க பினாமியாக என் பெயரில் அந்த வங்கிக்கணக்கை துவக்கினார். அதில் பண வரவு-செலவுகளை நடத்தியதும் இளங்கோவன் தான்.

அதேபோல் எனக்கு லோனில் கார் வாங்க, திருநகர் ஸ்டேட் வங்கியில் ஒரு கணக்கை இன்ஸ்பெக்டர் மலைச்சாமிதொடங்கி கொடுத்தார். போலீஸ் ரைட்டர் சாமியப்பன் விண்ணப்ப படிவத்தை நிரப்பிக் கொடுத்தார். செக்சிலிப்புகளில் கையெழுத்து போட்டு வாங்கி அவர்களே பைனான்ஸ் கம்பெனிக்கு கொடுத்துவிட்டனர் என்றார்ஜெயலட்சுமி.

போலீஸ் அதிகாரிகள் கைது?

இதற்கிடையே இளஙகோவன், மலைச்சாமி உள்ளிட்ட 21 போலீசார், அமைச்சர் தளவாய் சுந்தரத்தின் பி.ஏ.ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி, கடத்தல், கொலை மிரட்டல், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், அதிகாரதுஷ்பிரயோகம் செய்தல், பாலியல் பலாத்காரம் ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிஐ முதல் தகவல் அறிக்கையை தாக்கல்செய்துள்ளது.

எப்.ஐ.ஆர். தாக்கல் செய்யப்பட்டு விட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள 21 பேரும் சிபிஐயால் எந்தநேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X