For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீரப்பனை காட்டிக் கொடுத்த உளவாளிகள்!

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு:

வீரப்பனின் நடமாடும் பகுதி குறித்து தங்களுக்கு கடந்த 10 நாட்களாகவே உளவாளிகள் மூலமாக சரியான தகவல்கிடைத்து வந்ததாகவும், இதையடுத்து மிக ரகசியமான திட்டம் தீட்டி வீரப்பனை வலையில் விழச் செய்ததாகவும்அதிரடிப்படை எஸ்.பி. செந்தாமரைக் கண்ணன் தெரிவித்தார்.

வீரப்பனை சுட்டுக் கொன்ற டீமுக்கு விஜய்குமாருடன் சேர்ந்து தலைமை தாங்கிய செந்தாமரைக் கண்ணன்நிருபர்களிடம் பேசுகையில்,

உளவு பார்ப்பவர்கள், அதிரடிப்படையின் ரகசிய நடவடிக்கைகள் எல்லாம் சேர்ந்து துல்லியமாக நடத்தப்பட்டதாக்குதல் இது. வீரப்பன் இந்தப் பகுதியில் வாகனத்தில் செல்ல இருப்பதாக பல நாட்களுக்கு முன்பே தகவல்வந்துவிட்டது.

சில உள்ளூர் மக்களின் உதவியுடன் வீரப்பன் வெளியில் ஒரு மருத்துவமனைக்குச் செல்ல இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து வீரப்பன் கும்பலுக்கு சந்தேகம் ஏற்பட்டுவிடாதபடி எங்களது திட்டங்கள் தீட்டப்பட்டன. அவனைகாட்டுக்கு வெளியே தைரியமாக வரச் செய்யும் வகையில் நாங்கள் பதுங்கிக் கொண்டோம். எங்கள்நடமாட்டத்தை சுருக்கிக் கொண்டோம்.

அதே நேரத்தில் ரகசிய கண்காணிப்பை தீவிரமாக்கினோம். எங்களுக்கு கிடைத்த உளவுத் தகவல் சரியாகிவிட்டது.நாங்கள் எதிர்பார்த்தது போலவே தைரியமாகவே காட்டை விட்டு வெளியே வந்தான்.

இந்தத் தகவல் நேற்றிரவு 10.30 மணியளவில் எங்களுக்கு வந்து சேர்ந்தது. ஒரு வாகனத்தில் கிளம்பியதாகத் தான்தகவல் வந்தது. இதையடுத்து மூன்று டீம்களாக பிரிந்து பரவினோம். வழியில் வாகனங்களை நிறுத்தி சோதனையிடஇருந்தோம்.

காட்டில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் ஆம்புலன்ஸ் வந்தது எங்களுக்கு சந்தேகம் ஏற்படுத்தவே அதைத் தடுத்தோம்,சுற்றி வளைத்தோம்.

அப்போது வேனில் இருந்த டிரைவர் வெளியே குதித்து இருட்டில் ஓடி தப்பிவிட்டான். அப்போது கூட இதில்வீரப்பன் இருப்பான் என்று நினைக்கவில்லை.

வீரப்பன் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டதாக நான் நினைக்கவில்லை. அவன்நல்ல திடகாத்திரமாகவே இருந்தான். காட்டுப் பகுதியில் ஆம்புலன்சில் சென்றால் சந்தேகம் வராது என்று நினைத்துஅந்த வாகனத்தை பயன்படுத்தியிருக்கலாம.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X