For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேவாரத்திற்கு முதல் மரியாதை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Jayalalitha and Devaramஅதிரடிப்படையினருக்கு நடந்த பாராட்டு விழா மிகச் சிறப்பாகவும், இதுவரை எந்த அரசு விழாவும் இதுபோல நடந்திருக்காது என்று கூறும் அளவுக்கு பிரமாண்டமாகவும் நடந்தது. அதிலிருந்து சில துளிகள்:

  • வழக்கம்போல ஜெயலலிதாவின் விருப்ப கலரான பச்சை நிறத்தில் விழா மேடை அமைக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதாவும் பச்சை நிறப் புடவையில் வந்திருந்தார். விருந்து நிகழ்ச்சியில் ஜெயலலிதா அமர்ந்திருந்த டேபிளும் பச்சை நிறத் துணியால் "கவர்" செய்யப்பட்டிருந்தது. கம்பளமும் பச்சைதான்.

  • கிட்டத்தட்ட 4 மணி நேரம் ஜெயலலிதா அமர்ந்திருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதிரடிப்படை வீரர்கள்அனைவருக்கும் தனது கையாலேயே பதக்கத்தை அணிவித்து பரிசுகளைக் கொடுத்தார். இவ்வளவு நீண்ட நேரம்ஜெயலலிதா இதுவரை எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • நிகழ்ச்சியில் முதல் மரியாதை தேவாரத்திற்குத்தான். அவருக்குத்தான் முதல் பதக்கம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில்பேசிய ஜெயலலிதாவும், விஜயக்குமாரும் தேவாரத்தை வெகுவாக புகழ்ந்தனர். தேவாரம் தனதுகுடும்பத்தினருடன் கலந்து கொண்டார். வயதானாலும் பழைய மிடுக்குக் குறையாமல் கம்பீரமாக காணப்பட்டார்.

  • பதக்கம், பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு இடை இடையே நடன நிகழ்ச்சி, நாடகம் ஆகியவை நடத்தப்பட்டது. கலாகுழுவினரின் நடன நிகழ்ச்சிகளை ஜெயலலிதா வெகுவாக ரசித்துப் பார்த்தார்.

  • சினிமா கலை நிகழ்ச்சிகளை விட படு நேர்த்தியாக நடனங்களை வடிவமத்ைதிருந்தார் கலா. இது அரங்கத்தில்கூடியிருந்த அனைவரின் பாராட்டையும் பெற்றது.

  • டான்ஸர் படத்தில் நடிக்கும் ஒற்றைக் கால் இல்லாத இளம் நடனக் கலைஞரான குட்டி, தனது ஒற்றைக்காலில் ஆடியநடனம், அரங்கத்தில் இருந்தவர்களை பிரமிக்க வைத்தது. ஜெயலலிதா உள்பட அனைவரும் கை தட்டி அந்த கால்இழந்தும் நம்பிக்கை இழக்காத இளைஞரைப் பாராட்டித் தள்ளினர்.

  • அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும் என்ற அந்தக்கால எம்.ஜி.ஆர். பாடலுக்கு நடனம் ஆடியவர்கள்,ஸ்பிரிங் கம்பிகளை துகில் கட்டிக் கொண்டு மேலும், கீழுமாக போய் வந்து ஆடியது ஜெயலலிதாவை ரொம்பவேகுஷிப்படுத்தியது. வாய் நிறைய சிரித்துக் கொண்டு ரசித்தார்.

  • நடன நிகழ்ச்சியில் முதலாவதாக வந்த பாடல், மழைத்துளி, மழைத்துளி மண்ணில் சங்கமம் என்ற சங்கமம் படப்பாடல். மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தும் ஜெயலலிதாவைக் கவரும் வகையில் படுடைமிங்காக இந்தப் பாட்டைப் போட்டது, ஜெயலலிதாவின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.

  • நடன நிகழ்ச்சியை வடிவமைத்த கலாவுக்கு நிகழ்ச்சியின் இறுதியில் ஜெயலலிதா நினைவுப் பரிசு வழங்கிபாராட்டினார். கலாவும், ஜெயலலிதாவின் காலில் இருமுறை விழுந்து ஆசி பெற்றார்.

  • நிகழ்ச்சியை அதிமுகவைச் சேர்ந்த கவிஞர் இளந்தேவன் தொகுத்து வழங்கினார். ஜெயலலிதாவை அவர் புகழ்ந்துபேசியது ஜெயலலிதாவையே நெளிய வைத்தது. அந்த அளவுக்கு புகழ்ந்து தள்ளி விட்டார்.

  • அதிரடிப்படையினர் எப்படி வீரப்பனை வளைத்துப் பிடித்தனர் என்பதை கம்ப்யூட்டர் படங்கள் மூலம் திரையில்,செயல் விளக்கம் காட்டி விஜயக்குமார் அத்தனை பேரையும் அசத்தினார்.

  • விழாவின் இறுதியில் நடந்த இன்சுவை விருந்தில் 21 வகை பதார்த்தங்கள் இடம் பெற்றிருந்தன. பிரியாணி, மீன்பொறியல் என சகலமும் பரிமாறப்பட்டன. ஜெயலலிதாவும் விருந்தில் கலந்து கொண்டு இனிப்பு மட்டும் சாப்பிட்டுவிட்டு கிளம்பினார்.

  • மொத்தத்தில், வீரப்பனை வீழ்த்திய பெருமிதத்தோடு விழாவில் கலந்து கொண்ட அதிரடிப்படை வீரர்கள் விழாமுடிந்து போகும்போது ரூ. 3 லட்சம் பரிசுத் தொகையோடு லட்சாதிபதிகளாக திரும்பிச் சென்றார்கள்.
    Mail this to a friend  Post your feedback  Print this page 
  •  
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X