For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கம்பி நீட்டும் கருணாநிதி: ஓ.பி. கடும் தாக்கு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சரும், திமுக எம்.எல்.ஏவுமான துரைமுருகன் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு திறந்த மடல்அனுப்பியுள்ளார்.

அதில், தமிழகத்தின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து சட்டமன்றத்தில் பேச வேண்டியிருக்கிறது. ஆனால், சட்டமன்றம் கூடினால்தானே இதையெல்லாம் பேச முடியும். அப்படியே சட்டமன்றம் நடந்தாலும் நாங்கள் பேச அனுமதிக்கப்படுவோமா அல்லதுவெளியேற்றப்படுவோமா என்றும் தெரியவில்லை.

முதல்வர் செய்கிற அதிரடி மாற்றங்களால், இப்போது தமிழகத்தில் யார் என்ன அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்றும்புரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார் துரைமுருகன்.

ஓ.பி மூலம் பதில்:

இதற்கு பதிலளித்து பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

முன்னாள் பொதுப் பணித்துறை அமைச்சரும், இந் நாள் எதிர்க் கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் ஏளனம், ஏகடியம்,எகத்தாளம் கலந்து இதயத்தின் எரிச்சலை வரிவடிவமாக்கி, ஒரு திறந்த மடலை முதலமைச்சருக்கு அனுப்பியிருக்கிறார்.

இதன் நகலை அனைத்து பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இதிலிருந்தே அவரது நோக்கம் ஆக்கப்பூர்வமானகருத்தை முதல்வருக்கு தெரிவிப்பது அல்ல என்பதும், ஆராவார விளம்பரம் தேடுவது தான் நோக்கமே என்பதும்வெளிப்பட்டுவிட்டது.

வீராணம் திட்டத்தால் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வந்தது, வீரப்பனை ஒழித்துக் கட்டியது ஆகியவற்றால் முதல்வரின் புகழ்ஓங்கி வளர்வதைக் கண்டு மனம் வெதும்பி துரைமுருகன் தீட்டியிருக்கும் மடல் தான் அது.

சட்டமன்றத்தில் இந்தப் பிரச்சனைகளை பேச வேண்டியிருப்பதாகவும், ஆனால், சட்டமன்றம் கூடினால் தானே இதையெல்லாம்பேச முடியும் என்றும் அங்கலாய்த்திருக்கிறார்.

சட்டமன்றம் நடக்கும்போது இவர்கள் (திமுகவினர்) ஏதோ தவறாமல் வருவது போலவும், ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளைஅள்ளித் தருவது போலவும் புனித வேடம் பூணப் பார்க்கிறார் துரைமுருகன்

.2001ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆட்சியமைந்த பிறகு சட்டமன்றத்தில் எந்த முக்கிய நிகழ்ச்சியிலும் எதிர்க்கட்சித் தலைவர்களோ, உறுப்பினர்களோ இருந்தது இல்லை.

நிலைமை அப்படியிருக்க, சட்டமன்றம் கூடினால் தானே என்று வஞ்சகக் குரல் எழுப்பும் துரைமுருகன், எந்த ஒரு முக்கியநிகழ்வின்போதாவது சட்டமன்றத்தில் இருந்து தனது ஜனநாயகக் கடமையை ஒழுங்காய் செய்ததாக நெஞ்சு நிமிர்த்தி சொல்லமுடியுமா?

இவர் சார்ந்திருக்கும் கட்சியின் தலைவரான கருணாநிதியோ, சட்டமன்றத்துக்கே வர மாட்டார். வராந்தாவில் உள்ள வருகைப்பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு கம்பி நீட்டி விடுவார்.

வெளிநடப்பு செய்ய வேண்டும் என்பதற்காகவே அவைக்குள் வருபவர்கள் தான் திமுகவினர். அர்த்தமற்ற கூச்சல், நியாயமற்றவெளிநடப்புகளால் மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியவர்களில் ஒருவர் தான் துரைமுருகன்.

ஆனால், இன்று சட்டமன்றத்தில் பேச அனுமதிக்கப்படுவோமா அல்லது வெளியேற்றப்படுவோமா என்று போலி ஆதங்கத்தைதனது கடிதத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

முதல்வர் செய்கிற அதிரடி மாற்றங்களால் யார் என்ன அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்றே தெரியவில்லையாம்.

2001ம் ஆண்டு முதல் தளவாய் சுந்தரமும் அவரைத் தொடர்ந்து நானும் (பன்னீர்செல்வம்) தானே பொதுப்பணித்துறைஅமைச்சராக இருக்கிறோம். இதைக் கூட நினைவு வைத்துக் கொள்ள துரைமுருகனுக்கு முடியாதா?

சட்டசபைக்கே வராமல் சாலை ஓரத்தில் சட்டமன்றத்தில் நடத்தி தங்களையே அமைச்சர்களாகவும் சட்டமன்றத் தலைவராகவும்தேர்வு செய்து ஜனநாயகத்தையும் மக்களையும் கேலிக் கூத்தாக்கினால் இப்படி குழப்பம் துரைமுருகனுக்கு வரத்தானே செய்யும்என்று கூறியுள்ளார் பன்னீர்செல்வம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X