For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒதுங்கிய ஆர்வி, சேஷன், ஸ்ரீகாந்த், எஸ்.வி.சேகர்

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

Jayendrarசங்கர மடத்தின் வேத பாட சாலையில் கேரள மாணவர் மர்மமான முறையில் இறந்தது, மகளிர் விடுதியில் படித்து வந்த மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது ஆகிய விவகாரங்கள் குறித்து மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர் மீண்டும் இரவில்விசாரிக்கப்பட்டார்.

இவரைத் தவிர மடத்தின் நிர்வாகிகள், பணியாற்றுவோர் என மேலும் 12 பேரை விசாரணைக்கு ஆஜராகுமாறு காஞ்சி போலீசார்உத்தரவிட்டுள்ளனர்.

இவர்களில் முக்கியமானவர்கள் நெய்வேலி கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஜெயேந்திரரின் கார் டிரைவரான சித்தராமய்யர் ஆகியோர்.சங்கராச்சாரியாருடனேயே எப்போதும் இருப்பவர் தான் இந்த கிருஷ்ணமூர்த்தி. ஜெயேந்திரரை ஆந்திராவில் போலீசார் கைது செய்துஅழைத்து வந்தபோது கூடவே போலீசாரால் அழைத்து வரப்பட்டார் கிருஷ்ணமூர்த்தி.

இவரையும் கார் டிரைவரையும் போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளனர்.

இப்போது சங்கர மடத்தின் நிர்வாகிகளிலேயே மிக அதிகமான விசாரணைக்கு உள்ளாகி வருவது சுந்தரேச அய்யரும் ஏட்டையாகண்ணனும் தான். இருவருமே எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று கருதப்படுகிறது.

இவர்களிடம் மடத்தின் வரவு-செலவு, 65 கிலோ தங்கம் காணாமல் போனது, மடத்தின் கல்விக் கூடங்களில் நடந்த மர்மச் சாவுகள் குறித்துகிண்டி எடுத்து வருகின்றனர் போலீசார்.

தினமும் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்துவிட்டுப் போவதே சுந்தரேச அய்யருக்கும் கண்ணனுக்கும் வேலையாகவேபோய்விட்டது. அந்த அளவுக்கு அவர்களை நெருக்கி வருகின்றனர் போலீசார்.

இதில் சுந்தரேச அய்யர் கொஞ்சம் கெட்டியான ஆள். அதிகம் வாய் திறக்க மறுக்கிறார் என்கிறது போலீஸ்.

ஆனால், மாஜி ஏட்டையாவான கண்ணனுக்கு போலீஸ் ட்ரீட்மெண்ட் நன்றாகத் தெரியும் என்பதால், குலை நடுங்கிப் போய் இருப்பதாகச்சொல்கிறார்கள். தனி ரூமுக்குள் பிரேம்குமாரும் சக்திவேலும் கூப்பிட்டாலே கையைக் கட்டிக் கொண்டு கூனி, நாணி நிற்கும் கண்ணன்,மடத்தின் பல ரகசியங்களையும் சும்மா போட்டுத் தாக்குவதாகத் தெரிகிறது.

இதனால் இவரை அப்ரூவராக்கி, இவர் கொட்டி விஷயங்களை கோர்ட்டில் அடுக்கலாமா என்றும் யோசிதது வருகிறது போலீஸ்.

இதற்கிடையே சங்கராச்சாரியார் கைதான முதல் 4 நாட்கள் மடத்தில் புகுந்து தனது அதிகாரத்தைக் காட்டிக் கொண்டிருந்த மாஜி தேர்தல்ஆணையர் டி.என்.சேஷன் உள்ளிட்டோரை இப்போது அந்தப் பக்கமே பார்க்க முடியவில்லை.

கொலை கேஸ் தவிர பொம்பளை கேஸ், மர்ம மரணங்கள், நடிகைகள் தொடர்பு என வழக்கு திகிடுதத்தம் திருப்பங்களுடன் போகஆரம்பித்ததையடுத்து சேஷன் உள்ளிட்டோரை மடத்துப் பக்கமே பார்க்க இயலவில்லை.

மேலும் மடத்துக்கு அடிக்கடி வந்து செல்வோரையும் போலீசார் விசாரிக்க ஆரம்பித்துவிட்டதால், பல விஐபிக்கள் இப்போது ஒதுங்கஆரம்பித்துவிட்டனர். இதை வெளிப்படையாகவே சொல்லிச் சொல்லி வருந்துகின்றனர் மடத்தின் நலம் விரும்பிகள் சிலர்.

மடத்தின் மிக ஆழமான சீடரான எஸ்.வி. சேகர், இப்போது அதைவிட ஆழமான அமைதியில் இருக்கிறார்.

அதே போல டெல்லியில் பா.ஜ.க. நடத்திய போராட்டத்தில் பங்கேற்றதோடு ஒதுங்கிக் கொண்டு, மடத்துப் பக்கமோ, சென்னை பக்கமோகூட தலை வைத்துப் படுக்காமல் இருக்கிறார் முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன்.

இதே மாதிரித் தான் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தும். அடிக்கடி மடத்துக்கு வந்துவிட்டுப் போகும் இவர், சங்கராச்சாரியார் சொன்னதற்காககடந்த தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.

ஆனால், கைது சம்பவத்துக்குப் பின் ஸ்ரீகாந்துக்கும் மடத்தை எட்டிப் பார்க்கவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X