For Daily Alerts
Just In
காஞ்சி பட்டாசுத் தொழிற்சாலையில் தீ- 3 பேர் பலி
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
காஞ்சிபுரம் காமராஜர் தெருவில் சந்திரன் என்பவர் ஒரு பட்டாசுத் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இந்த பட்டாசுத் தொழிற்சாலையில்சிறு ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இன்று காலை இந்த தொழிற்சாலையில் சந்திரன் உள்பட 7 பேர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாகதீவிபத்து ஏற்பட்டது.
மிக வேகத்தில் பரவிய தீயில் பட்டாசுகள் வெடித்துச் சிதறின. வெடி மருந்தால் தீ கடுமையாகப் பரவியது.
இதில் சந்திரன் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள். சந்திரனின் மகன் ரமேஷ் படுகாயத்துடன் காஞ்சிபுரம் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


