தமிழகத்தில் இந்து மாநாடுகள் நடத்த பாஜக திட்டம்
ராமநாதபுரம்:
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உலக அதிசயமானால் அதன் புனிதம் கெட்டுப் போய் விடும் என்று பாரதீய ஜனதா கட்சியின் அகிலஇந்திய செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு, சிறுபான்மை மக்களின் நலன்களிலேயே அதிக அக்கறை செலுத்துகிறது. நாட்டிற்குதீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் பொடா சட்டம் நீக்கப்பட்டுள்ளது. இதனால் தீவிரவாதிகள் பலர் விடுதலை ஆகும்வாய்ப்பு உள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கான மசோதா கொண்டு வரப்பட உள்ளது. இதை நாங்கள்எதிர்ப்போம். ஜெயேந்திரர் குற்றமற்றவர். அவர் மீது வேண்டும் என்றே தரக்குறைவான ஆபாச விமர்சனங்கள் கூறப்படுகின்றன. இத்தகையவிமர்சனங்களை நிறுத்த வேண்டும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை உலக அதிசயங்கள் பட்டியலில் சேர்க்க இணைய தளத்தில் ஒரு வெளிநாட்டு நிறுவனம் வாக்கெடுப்புநடத்துகிறது. பக்திக்குரிய இடமான மீனாட்சி அம்மன் கோயில் அதிசய பொருளாக மாறினால் அதன் புனிதம் கெடும். வழிபாட்டுக்குஇடையூறு ஏற்படும்.
எனவே மத்திய அரசின் கலாச்சார துறை வாக்கெடுப்பை கண்காணிக்க வேண்டும் அல்லது வாக்கெடுப்பை அரசு மேற்பார்வையில் நடத்தவேண்டும். மத உணர்வுகளைத் தூண்டியதாக பாஜக எம்.எல்.ஏ. எச்.ராஜா மீது வழக்கு போடப்பட்டு உள்ளது.
சட்டசபைக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசும்போது ராஜா குறுக்கிட்டு பேசியதாலேயே அவர் மீது இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. இதனை சட்ட ரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம்.
தமிழ்நாடு முழுவதும் இந்து மாநாடு நடத்த திட்டமிட்டிருக்கிறோம். முதலில் ராமநாதபுரம், மதுரை, திருச்சியில் இந்த மாநாடு நடக்கும்.வருகிற 18ம் தேதி விழுப்புரத்தி லும், 19ம் தேதி கோவையிலும் நடக்கும். இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜன் கலந்துகொள்வார் என்று கூறினார்.


