For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுனாமியை கண்டறியும் கருவிகள்: திமுக கூட்டணி கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

DPA Meeting

மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த டிசம்பர் 26ம் தேதியை சுனாமி தினமாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திமுக கூட்டணிக் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இன்று சென்னைஅண்ணா அறிவாலயத்தில் நடந்தது. சுனாமி சேதம் குறித்து முதல்வர் ஜெயலலிதா நாளை கூட்டியுள்ள அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடர்பாக குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்திற்குத் திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். இதில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன்,பொருளாளர் ஆற்காடு வீராசாமி, காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமகநிறுவனர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், நாளை ஜெயலலிதா கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வைக்கப்பட வேண்டியகோரிக்கைகள் குறித்துத் தலைவர்கள் விவாதித்தனர்.

பின்னர் இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்:

சுனாமி அலைகள் வருவதை முன்கூட்டியே அறிவிக்கும் சாதனங்கள் ஏதும் இல்லாததால் தமிழகத்தில் மிகப்பெரும் சேதம் ஏற்பட்டது.எனவே அத்தகைய சாதனங்களை உடனடியாக சென்னை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் அமைக்க வேண்டும்.பின்னர் தமிழக கடலோரம் முழுவதும் இந்தச் சாதனங்களைப் பொறுத்த வேண்டும்.

எங்கெல்லாம் மணல் கொள்ளை நடந்ததோ அங்கு தான் கடல் கொந்தளிப்பின் பாதிப்பின் அதிகமாக இருந்துள்ளது. இதனால்கடலோரங்களில் மணல் எடுப்பதை உடனடியாகத் தடுக்க வேண்டும்.

கடல் கொந்தளிப்பால் பல மாவட்டங்களில் விவசாய நிலங்களிலும் கடல் நீர் புகுந்துவிட்டது.ய இதனால் நிலங்கள்உவர் தன்மை உடையவையாக மாறும் அபாயம் உள்ளது. இதைச் சீர் செய்து மீண்டும் விவசாயத்தை மேற்கொளளவிவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 5,000 உதவித் தொகை வழங்க வேண்டும்.

இயற்கை சீற்றங்களின்போது போக்குவரத்தைத் துரிதப்படுத்த, கிழக்குக் கரையோர சாலையை 4 வழிப்பாதையாக மாற்ற வேண்டும்.

தமிழகத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு, மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நிதியுதவி அளிக்கவேண்டும். சேதமடைந்த கட்டுமரங்கள், படகுகள், வலைகள் போன்றவற்றை புதிதாக தமிழக அரசு முழுவதுமாகஇலவசமாக அளிக்க வேண்டும்.

மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த டிசம்பர் 26ம் தேதியை சுனாமி தினமாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுக்கவேண்டும்.

நிவாரணப் பணிகளைக் கண்காணிக்க, அனைத்துக் கட்சியினர் அடங்கிய குழுவை மத்திய, மாநில அரசுகள் அமைக்க வேண்டும் ஆகியதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நாளை முதல்வர் கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து எந்தத் தகவலையும் இக் கூட்டணி வெளியிடவில்லை.இரவில் அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X